Thursday, April 23

ரணம் அறம் தவறேல் -விமர்சனம்

அடையாளம் இழந்து போய் சிதைந்து நிலையில் உள்ள சடலங்களை பற்றி அறிய அந்த உருவங்களை வரைந்து கடும் திறன் கொண்டவாராய் சிவா (வைபவ்) உள்ளார் ஒரு கட்டத்தில் துண்டுகள் ஆக்கப்பட்ட ஒரு உடல் எரிக்கப்பட்ட நிலையில் மூன்று இடங்களில் கிடப்பது காவல்துறைக்கு பெரும் சவாலாக இருக்கிறது இதற்க்கு சிவாவின் உதவி நாடப்படுகிறது ஒரு சூழ்நிலையில் அந்த வழக்கை விசாரானை செய்யும் இன்ஸ்பெக்டரும் காணாமல் போய் விடுகிறார். அதன் பின்பு புதிய பெண் இன்ஸ்பெக்டர் (தான்யா ஹோப் )ஒருவர் அந்த வழக்கை விசாரணை செய்கிறார். அவருக்கு உதவியாக இருக்கிறார் சிவா ,.அதன் பின்பு நகரும் மீதி கதையில் அந்த வழக்கின் மர்மங்களுக்கு விடை காணும் வகையில் காட்சிகள் அமைகின்றன..
சிவா என்னும் கதாபாத்திரத்தில் சொந்த சோகங்கள் ஒருபுறம் உடல் னால ப்ரிச்சனி மறுபுறம் அதோடு கொலை வழக்குகளை பற்றி ஆராய்வது என பல உணர்வுகளை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார் வைபவ் (வைபவின் 25 ஆவது படம் இது )

பெண் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் தான்யா ஹோப் நடித்துள்ளார் மேலும் நந்திதா ஸ்வேதா . கிச்சா ரவி, சுரேஷ் சக்ரவர்த்தி போன்றோரும் இயல்பாக நடித்துள்ளார்கள்

திரில்லர் கதைக்கு தேவையான விறுவிறுப்பை ஒளிப்பதிவாளர் பாலாஜி.கே.ராஜாவும், அரோள் கரோலி தன து பின்னணி இசையால் அரோள் கரோலியும் கொடுத்துள்ளார்கள்

.தொழில் நுட்ப துணையுடன் கிரைம் திரில்லர் படமாக ஷெரிப் இயக்கியுள்ள இந்த படம் இளம் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது

Spread the love