போரில் இருந்து டேனியல் (ஷபீர் கல்லாரக்கல்) என்னும் ராணுவ வீரர் ஒருவர் தன்னுடைய வீட்டுக்கு திரும்பிவருகிறார் , அப்போது டேனியல் மனைவி ஜெனிபர் ( மிர்னா)கர்ப்பமாக உள்ளார். டேனியலுக்கு இது தனது குழந்தை தானா ?என்ற சந்தேகம் ஏற்படுகிறது . அந்த சந்தேகம் அவருக்குள் இருந்த போதிலும் தனது மனைவி மீது அதிக அன்பையும் டேனியல் கொண்டுள்ளார், பின்பு தனது மனைவியை இயற்கையான முறையில் பிரசவம் பார்க்கவேண்டி ஒரு மலைபகுதிக்கு அவரை அழைத்து செல்கிறார் அங்கு எந்த விதமான மருத்துகளோ மாத்திரைகளோ இல்லாமல் இயற்கை சார்ந்த வழி முறையில் பிரசவம் பார்க்கும் முறை உள்ளது அந்த பகுதியில் ஜெனிபர் குழந்தையை பெற்று எடுத்தாரா ?அந்த குழந்தை யாருடையது ?என்னும் பல வினாக்களுக்கு விடை சொல்லுகிறது பர்த் மார்க் படத்தின் மீதி கதை.
டேனியல் என்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் ஷபீர் கல்லாரக்கல் நன்கு நடித்துள்ளார்.அவரது தோற்றம் அவர் ஏற்ற கதாபாத்திரத்துக்கு வலிமை சேர்க்கும் வண்ணம் பொருத்தமாக உள்ளது.கதையின் நாயகியாக ஜெனிபர் என்னும் கர்ப்பிணி பெண்மணி கதாபாத்திரத்தில் மிர்னா சிறப்பாக நடித்துள்ளார் மேலும் தீப்தி, பொற்கொடி , இந்திரஜித் ,PR வரலக்ஷ்மி ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நன்கு நடித்து உள்ளனர்.

ஒரு நல்ல கதையினை மேலும் நல்லமுறையில் ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்க்க அது தொழில் நுட்ப முறையிலும் சிறப்பாக உருவாக்கப்படவேண்டும் ,அந்த வகையில் இந்த படத்தின் ஓளிப்பதிவாளர் உதய் தங்கவேலு, இசையமைப்பாளர்விஷால் சந்திரசேகரன், படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியன் போன்றோர் தங்களது சிறப்பான பங்களிப்பை கொடுத்து இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரனுக்கு பக்க பலமாய் நின்றுள்ளார்கள் , இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் தான் சொல்ல வந்த கருத்தை சரியான முறையில் சொல்லியுள்ளார் என்றே சொல்லலாம் .
பர்த் மார்க் -படம்பார்க்கும் ரசிகர்களிடையே நிச்சயம் நல்ல மதிப்பெண் எடுக்கும்.
