‘கணம்’ படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க முடிந்தது எனக்குக் கிடைத்தப் பெருமை! – நடிகை அமலா
ட்ரீம் வாரியர் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள படம் ‘கணம்’. இந்தப் படத்திலிருந்து சமீபத்தில் அம்மா பாடல் வெளியிடப்பட்டது. இதற்கு இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். அதன் பாடல் வரிகளை உமா தேவி எழுதியுள்ளார்.
அம்மா பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் அமலா அக்கினேனி. ‘கணம்’ படத்தில் சர்வானந்திற்கு அம்மாவாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் அமலா நடித்துள்ளார். தற்போது கிடைத்துள்ள இந்த வரவேற்பு தொடர்பாக அமலா கூறியிருப்பதாவது:
“மகனுக்கும், அம்மாவுக்கும் இடையிலான அன்பு என்றும் அழியாது என்பதைச் சொல்வதற்காகவே அம்மா பாடல் உருவாக்கப்பட்டது. ஜேக்ஸ் பிஜாயும், பாடகர் சித் ஸ்ரீராமும் உண்மையிலேயே ஒரு மாயாஜாலத்தைச் செய்துள்ளனர்.
முதல் முறை அந்தப் பாடலைக் கேட்ட போது இதமாக, மென்மைய...








