சல்லியர்கள் டீஸரை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டார்
சமகாலத்தில் நம் கண் முன்னே தமிழ் நிலத்தில் நடந்த போர் ஒன்றை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘சல்லியர்கள்’.மேதகு (பார்ட்-1) படத்தின் மூலமாக முதன்முறையாக ஈழ தமிழர் வரலாற்றை தெளிவாக படம்பிடித்து உலக தமிழர்களின் பாராட்டுக்களை பெற்ற இயக்குநர் கிட்டு. தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர் கருணாஸ் தயாரித்துள்ள முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள இந்தப்படத்தின் டீஸரை இன்று மாலை ஆறு மணிக்கு கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டார்.
போர்க்களத்தில் காயம்பட்ட தமிழ் வீரர்கள் மட்டுமல்லாது எதிரி வீரர்களையும் காப்பாற்றி, போரில் கூட தமிழர்கள் எவ்வாறு அறம் சார்ந்து செயல்பட்டுள்ளனர் என்பதை மையப்படுத்தி, குறிப்பாக போர் மருத்துவ பின்னணியில் இந்தப்படம் உருவாகியுள்ளது.
சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லன் களவாணி புகழ்...









