Sunday, April 20

அசத்தலான  மாஸ் கூட்டணி

தெலுங்கு திரை உலகில் சமீபத்தில் வெளி வந்து வெற்றி பெற்ற “அகாண்டா” உள்ளிட்ட  பல வெற்றி படங்களை இயக்கி உள்ள இயக்குனர் போயபதி ஸ்ரீனு,  லிங்குசாமி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகும் தி வாரியர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்க,  வெற்றி பட தயாரிப்பாளர்  ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் ஒரு பிரமாண்டமான பன்மொழி  இந்திய படம் உருவாகிறது.

Srinivasaa Silver Screen நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சித்தூரி அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளுக்கு பிறகு, ராம் பொத்தினேனி நடிப்பில், இயக்குநர் N லிங்குசாமி இயக்கத்தில் ‘தி வாரியர்’ படத்தை தயாரித்து வருகிறார்.

இயக்குநர் போயபதி ஸ்ரீனு, சமீபத்தில் பிரமாண்ட ஹிட்டடித்த நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த ‘அகாண்டா’ படத்தை இயக்கிய உற்சாகத்தில் உள்ளார். நடிகர் ராம் பொத்தினேனி தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நாயகனாக ரசிகர்கள் இதயங்களை வென்றுள்ளார் , திரையுலக வல்லுநர்களின் கணிப்பின் படி ராம் பொத்தினெனி அனைத்து மொழி ரசிகர்களும் ஆராதிக்கும் ஓரூ நடிகராக வருவார் என நம்பபடுகிறது.

இந்த மூன்று பிரபலங்களும் ஒரு திரைப்படத்தில் இணைவது திரைத்துறையின் மிகப்பெரும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு விரைவில் தலைப்பு வைக்கப்படவுள்ளது.

இயக்குநர் போயபதி ஸ்ரீனு இம்முறை ஹீரோ மற்றும் தயாரிப்பாளரை ஈர்க்கும் அட்டகாசமான மாஸ் கதையுடன் வந்துள்ளார்.

படத்தில் நடிக்கும் நாயகி, நடிகர்கள் குழு மற்றும் தொழில்நுட்ப குழு பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Spread the love