SUPERB CREATIONS ராஜகோபால் இளங்கோவன் வழங்கும்,இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில், “வெள்ளிமலை” டீசர் வெளியானது !
பழங்காலத்திலிருந்தே, உயிர்க்கொல்லி நோய்களைக் கூட இலைகளின் சாற்றால் குணப்படுத்தும் இயற்கை மருந்துகள், அற்புத குணப்படுத்தும் சக்திகளின் பூமி என்று தமிழ்நாடு எப்போதும் போற்றப்படுகிறது. துறவி போகர் (போகநாதர்) போன்ற சித்தர்கள் வாழ்ந்த தமிழ்நாடு அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது, அவர்களின் மருந்தியல் இன்றளவிலும் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இன்றைய மருத்துவத்திற்கு கோரக்கர், புலிப்பாணி, அகத்தீசர் போன்ற சித்தர்கள் அளித்த பங்களிப்பு மறுக்கமுடியாதது, அவர்கள் வழங்கிய பூர்ண லேகியம் மற்றும் சொர்ணம் ஆகியவை சமகால உலகில் இயற்கை மருந்துகளின் அடித்தளமாக உள்ளன. இந்த துறவிகள் தந்த பெரும் இயற்கை மருந்துகளின் பங்களிப்பால் நாம் ஆசீர்வதிக்கப்பட்ட போதிலும், தற்போது செயற்கை மருந்துகளுக்கு அடிமையாகிவிட்டோம், இது ஒரு நோயைக் குணப்படுத்தும் பெயரில் மற்றொரு நோயை தான் தூண்டுகிறது.
வெள்ளிமலை, திரைப்படம் சித்தர...









