Tuesday, May 26

Author: admin

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் ஜோடி சேரும் புதிய படம்! பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் ஜோடி சேரும் புதிய படம்! பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!

சினிமா
Million Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களுடன் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை வழங்கி வரும் Million Dollar Studios, 'குட் நைட்', 'லவ்வர்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' உள்ளிட்ட ஹாட்ரிக் வெற்றிகளுக்குப் பிறகு, தனது 7-வது தயாரிப்பாக இப்படத்தை உருவாக்கி வருகிறது. Million Dollar Studios மற்றும் Neo Castle Creations நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை, சத்யா கரிகாலன் மற்றும் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரிக்கின்றனர் 'ஜமா' படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடிக்கிறார். தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாய...
இரண்டு உலக சாதனைகளை படைத்த நடிகர் விஜய் விஷ்வாவின் ‘விவி என்டர்டைன்மென்ட்ஸ்’

இரண்டு உலக சாதனைகளை படைத்த நடிகர் விஜய் விஷ்வாவின் ‘விவி என்டர்டைன்மென்ட்ஸ்’

சினிமா, செய்திகள்
*இரண்டு உலக சாதனைகளை படைத்த நடிகர் விஜய் விஷ்வாவின் 'விவி என்டர்டைன்மென்ட்ஸ்'* VV Entertainments நிறுவனம் கடந்த ஆண்டு முதல் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது அதனைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு many faces one voice - stop violance against her என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் உள்ள தி அமெரிக்கன் கல்லூரி மற்றும் லேடி டோக் கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது. VV எண்டர்டெயின்மெண்ட்ஸ், DARS எண்டர்டெயின்மெண்ட் (அமெரிக்கா) மற்றும் தி அமெரிக்கன் கல்லூரி இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் போதைப் பொருள் பழக்கத்தின் தீமைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. பெண்கள் மாண...
*துபாயில் கண்ணன் ரவி குழுமம் (Kannan Ravi Group) க்கு சொந்தமான புதிய பாந்தர் கிளப் Panther Club ஐ, திறந்து வைத்த  கிங் கான் ஷாருக்கான் ! (King Khan Shah Rukh Khan)*

*துபாயில் கண்ணன் ரவி குழுமம் (Kannan Ravi Group) க்கு சொந்தமான புதிய பாந்தர் கிளப் Panther Club ஐ, திறந்து வைத்த  கிங் கான் ஷாருக்கான் ! (King Khan Shah Rukh Khan)*

சினிமா
பிரமாண்ட தொடக்கம்! Kannan Ravi Group-ன் Panther Club திறப்பு விழாவில் ஷாருக் கான் கலந்துகொண்டார் ! துபாயில் Kannan Ravi Group நிறுவனத்திற்கு சொந்தமான புதிய பிரம்மாண்ட பொழுதுபோக்கு மையமான Panther Club-ஐ, கிங் கான்  ஷாருக் கான் நேற்று திறந்து வைத்து சிறப்பித்தார். இந்த நிகழ்வு, துபாயின் நைட்லைஃப் வரலாற்றில் முக்கியமான தருணமாக மாறி, புத்தாண்டு கொண்டாட்டங்களின் உச்சமாக அமைந்தது. துபாயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கண்ணன் ரவி குழுமம் (Kannan Ravi Group), வணிகம், ரியல் எஸ்டேட், விருந்தோம்பல் (Hospitality), பொழுதுபோக்கு மற்றும் லக்ஷரி சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. தரமான சேவை, நவீன அணுகுமுறை மற்றும் சர்வதேச தரத்திலான நிர்வாக முறைகள் ஆகியவற்றின் மூலம், இந்த குழுமம் துபாயின் வளர்ந்து வரும் வணிக சூழலில் தனித்துவமான இடத்தைப் பெ...
*நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் ‘திரெளபதி 2’ திரைப்படம் U/A சான்றிதழ் பெற்று வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது!*

*நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் ‘திரெளபதி 2’ திரைப்படம் U/A சான்றிதழ் பெற்று வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது!*

சினிமா
*நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் 'திரெளபதி 2' திரைப்படம் U/A சான்றிதழ் பெற்று வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது!* மோகன் ஜி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வரலாற்று ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள 'திரெளபதி 2', மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திடமிருந்து (CBFC) வெற்றிகரமாக U/A சான்றிதழைப் பெற்று, திரையரங்க வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. பலமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசுதன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் Y.G. மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயாணி ஷர்மா மற்றும் அருணோதயன் ஆகியோரும் நடித்துள்ளனர். நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோழ சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த 'திரௌபதி 2' திரைப்படம்...
‘டிமாண்டி காலனி 3’  படத்தின் அதிரடியான மிரளவைக்கும் முதல் பார்வை தோற்றம் புத்தாண்டு தினத்தில் வெளியாகியுள்ளது!*

‘டிமாண்டி காலனி 3’  படத்தின் அதிரடியான மிரளவைக்கும் முதல் பார்வை தோற்றம் புத்தாண்டு தினத்தில் வெளியாகியுள்ளது!*

சினிமா
*தமிழ் சினிமாவின் மிகப்பெரிய சூப்பர் நேச்சுரல் படமான 'டிமாண்டி காலனி 3'  படத்தின் அதிரடியான மிரளவைக்கும் முதல் பார்வை தோற்றம் புத்தாண்டு தினத்தில் வெளியாகியுள்ளது!* சூப்பர்நேச்சுரல் திகில் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. வெறுமனே ரசிகர்களை பயமுறுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்காமல், கதைக்கேற்ற சரியான தொழில்நுட்பத்தை துல்லியமாக திரையில் கொண்டுவந்து பார்வையாளர்களை தக்க வைப்பதிலும் படத்தின் வெற்றி அடங்கியுள்ளது. 'தி கான்ஜுரிங்' மற்றும் 'தி ஈவில் டெட்' போன்ற ஹாலிவுட் ஃபிரான்சைஸ் படங்கள் ஒரே மாதிரியான கதாபாத்திர தொடர்ச்சி மற்றும் சூழ்நிலையுடன் கூடிய சூப்பர்நேச்சுரல் படங்கள் எவ்வாறு ரசிகர்களை தக்கவைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. தமிழ் சினிமாவிலும் இயக்குநர் அஜய் ஞானமுத்து 'டிமான்டி காலனி' படத்தின் தொடர்ச்சி மூலம் இதேபோன்று ரசிகர்களை தக்க வைத்துள்ளார். படத்தி...
*’மார்க்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகை தீப்ஷிகா சந்திரன்!*

*’மார்க்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகை தீப்ஷிகா சந்திரன்!*

சினிமா
*’மார்க்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகை தீப்ஷிகா சந்திரன்!* ’மார்க்’ படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை தீப்ஷிகா சந்திரன் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக அறிமுகமாகிறார். திறமையான நடிப்பு, ஆழமான அறிவு, வசீகரமான திரை இருப்பு என தீப்ஷிகாவின் திறமை நிச்சயம் தமிழ் சினிமாவில் அவரை அடுத்த பெரிய நட்சத்திரமாக உயர்த்தும். ‘மார்க்’ திரைப்படத்தில் தீப்ஷிகா வலிமையான வெரைட்டியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ‘மார்க்’ படத்தில் அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததோடு பார்வையாளர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. படத்தில் அவரது நடிப்பை பார்த்து பாராட்டியுள்ளவர்கள் நிச்சயம் திறமையாக நடிகையாக அவர் வலம் வருவார் எனவும் தெரிவித்துள்ளனர். நடிகையாக வேண்டும் என்ற லட்சியத்தோடு திரைத்துறைக்குள் நுழைந்திருப்பவரான தீப்ஷிகா...
*அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது*

*அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது*

சினிமா
*அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது* Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. நவீன இளைஞர்களின் வாழ்வை மையப்படுத்தி வெளியான படம் டீசர், சிங்கிள் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ரசிகர்கள் இப்படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், அசத்தலான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு திரையரங்கு வெளியீட்டை அறிவித்துள்ளது படக்குழு. முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான காதல் கதையாக உருவாகிவரும் “வித் லவ் ( With Love )...
கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சினிமா
*நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் தயாரிப்பில் 'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு* *பிரபல மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடிக்கும் இப்படம் ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள நிலையில் விரைவில் வெளியாகிறது* திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கியுள்ள முதல் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் ‍பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிக்கும் இப்படத்தை 'நாய...
*சிஷ்யனை இயக்கும் குரு: ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின் நடிக்கும் ‘சுப்ரமணி’*

*சிஷ்யனை இயக்கும் குரு: ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின் நடிக்கும் ‘சுப்ரமணி’*

சினிமா
*ரிச்சர்ட் ரிஷி, நட்டி முக்கிய வேடங்களில் நடிக்கும் பரபரப்பான கிரைம் திரில்லர் 'சுப்ரமணி'* 'பிரியமுடன்', 'யூத்', 'ஜித்தன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் 'சுப்ரமணி'. தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் பரபரப்பான கிரைம் திரில்லரான 'சுப்ரமணி' திரைப்படத்தில் இயக்குநர் செல்வாவின் உதவியாளராக தளபதி விஜய் நடித்த 'யூத்' மற்றும் ஜித்தன் ரமேஷ் நடித்த 'ஜித்தன்' திரைப்படங்களில் பணியாற்றிய மிஷ்கின் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ரிச்சர்ட் ரிஷி மற்றும் நட்டி என்கிற நட்ராஜன் சுப்பிரமணியம் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'சுப்ரமணி' திரைப்படம் குறித்துப் பேசிய இயக்குநர் ஆர் கே செல்வா, "இப்படத்தில் மிஷ்கினை இயக்கியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது...
*இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார் கபிலன்வைரமுத்து எழுதிய நித்திலன் வாக்குமூலம்*

*இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார் கபிலன்வைரமுத்து எழுதிய நித்திலன் வாக்குமூலம்*

இலக்கியம், சினிமா, செய்திகள்
*ஆகோள், மாக்கியவெல்லி காப்பியம் ஆகிய இரண்டு பாகங்களைத் தொடர்ந்து மூன்றாவது பாகமான நித்திலன் வாக்குமூலம் வெளியானது* செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் குறித்து துல்லியமாக விவாதிக்கும் ‘நித்திலன் வாக்குமூலம்’ என்ற நாவல் இன்று வெளியானது. எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து இதனை எழுதியுள்ளார். முதல் இரண்டு பாகங்களை வெளியிட்ட இயக்குநர் பாரதிராஜா, நிறைவு பாகத்தையும் வெளியிட்டிருக்கிறார். இயக்குநர் இமயம் பாரதிராஜா நூலை வெளியிடும் காட்சி, ஒரு சில தினங்களுக்கு முன் அவரது இல்லத்தில் படமாக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் குற்ற இனச் சட்டத்தை மையமாகக் கொண்ட கபிலன்வைரமுத்துவின் ஆகோள் என்ற நாவல் 2022ஆம் ஆண்டு வெளியானது. அதன் இரண்டாம் பாகமான மாக்கியவெல்லி காப்பியம் 2024ஆம் ஆண்டு வெளியானது. ஆகோள் தொடரின் மூன்றாவது மற்றும் நிறைவு பாகமான நித்திலன் வாக்குமூலம் இன்று வெளியானது. ஆகோள் முதல் பாகம்,...