*கொரியன் ஃபேமிலி சாங் வைப்ஸ்… “கான் சிட்டி” முதல் சிங்கிள் கலக்கல் ஹிட்!*
*“கான் சிட்டி” முதல் சிங்கிள் வெளியீடு…, வைரலாகும் கொரியன் ஃபேமிலி சாங் “ரா ரா ரங்கையா” குத்துப்பாடல்!*
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்த பாடலை வங்கல் புள்ள, விக்கி, சுப்லாஷினி, லீலா ஆகியோர் உற்சாகமாக பாடியுள்ளனர். “கொரியன் ஃபேமிலி சாங்” என சுவாரஸ்யமான தலைப்புடன் வெளியாகியுள்ள இந்த பாடல், “ரா ரா ரங்கையா” என்ற வரியுடன் துவங்கி, நம்மூர் தரைலோக்கல் குத்துப்பாணியில் முழுக்க முழுக்க உற்சாகத்தைக் கொட்டுகிறது.
பாடலின் இசை மட்டுமல்லாமல், காட்ச...









