Thursday, June 12

விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் புதிய படம் “லாயர்” !!

விஜய் ஆண்டனி நடிப்பில், “ஜென்டில்வுமன்” பட இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கும் “லாயர்” டைட்டில் லுக் வெளியானது !!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் உருவாகும் ”லாயர்” திரைப்படத்தை “ஜென்டில்வுமன்” படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்குகிறார்.

நீதிமன்ற பின்னணியில் ஒரு வித்தியாசமான வழக்கை மையமாக வைத்து, இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன்.

இதுவரை திரையில் காட்டியிராத, நீதிமன்றத்தையும், அதன் நடைமுறைகளையும், தத்ரூபமாகத் திரையில் பிரதிபலிக்கும் திரைப்படமாக இப்படம் இருக்கும்.

விஜய் ஆண்டனியுடன் இப்படத்தில் அவருக்கு இணையான எதிர் கதாப்பாத்திரத்தில், இந்தியளவில் புகழ் பெற்ற ஒரு நடிகையும் இப்படத்தில் இணையவுள்ளார்.

இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், படக்குழு இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகையர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Spread the love