தான் வாழும் சமூகம் தரும் அழுத்தத்தினால், ஒரு தனி மனிதனின் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் மாறுபட்ட சம்பவங்களை பதிவு செய்துள்ளது இந்த ”கர” திரைப்படம்.
சின்ன வயசுல அப்பா கிட்ட இருந்த பணத்தை திருடிவிட்டு வீட்டை விட்டு வெளியே போற தனுஷ். திருடனாக மாறிப்போன பிறகு, அவர் காதலித்த மமிதா பைஜூவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறாரு, இதனால திருந்தி நல்லவனா வாழணும்னு முடிவு பண்றாரு, அதற்கு முன்பாக பிரித்வி பாண்டியராஜ் கூட சேர்ந்து கடைசியா ஒரு எம்எல்ஏ வீட்டில் திருட போறாங்க , அப்ப தனுஷ் போலீஸ் கிட்ட மாட்டிக்கிறாரு .இந்த நிலையில் , இருக்கிற பல கேஸ்களை தனுஷ் மேல போட்டு கௌரவமா ரிட்டையர்டு ஆகணும்னு போலீஸ் அதிகாரியாக உள்ள சுராஜ் முடிவு பண்றாரு, எங்க திரும்பவும் தன்னோட வாழ்க்கை பழைய மாதிரியே ஆகிவிடுமோ என்று நினைக்கிற தனுஷ் ,அவரை தாக்கிட்டு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தப்பிக்கிறார். தமிழ்நாட்டில் இருந்து தலைமறையாகும் தனுஷும் ,மமிதாவும் ஆந்திராவில் இருக்கிற ஹோட்டல்ல வேலை செய்றாங்க. ஒரு கட்டத்துல சொந்தமாக தொழில் தொடங்கணும்னு முடிவு பண்றாங்க. சொத்து இருந்தா அதை வச்சு பணம் தருவதாக பேங்க்ல சொல்ல,அதன்படி சொந்த ஊர்ல இருக்குற 8 ஏக்கர் நிலத்தோட பத்திரத்தை அப்பாகிட்ட கேட்டு வாங்கி தொழில் பண்ணலாம்னு தனுஷும் மமிதாவும் சொந்த ஊருக்கு வராங்க. ஆனால் அந்த நிலத்து பேர்ல தான் டிராக்டர் வாங்கி இருக்கிறதாகவும் ,அந்த பத்திரம் இப்பவே பேங்க்ல இருக்கறதாவும் தனுஷின் அப்பா கே எஸ் ரவிக்குமார் சொல்றாரு, இதனால என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கற தனுஷ், நிலத்தை வித்துடலாம்னு சொல்றாரு , அதோட தான் வந்த நோக்கத்தையும் ரவிக்குமார் கிட்ட சொல்றாரு ,இதனால தன்னோட மகன் திரும்பி வந்துட்டான்னு சந்தோஷமாக இருந்த ரவிக்குமார் மனம் உடைந்து போகிறாரு ,உயிரோடு இருக்கிற வரைக்கும் என் நிலத்தை விற்க மாட்டேன்னு பிடிவாதமாக அவர் சொல்றாரு , கடைசில மதுமிதா கிட்ட நடந்த விஷயங்களை தனுஷ் சொல்ல அடுத்த நாள் மமிதாவை சொந்த வீட்டுக்கு கூட்டிட்டு வராரு ,ஆனா மனமுடைஞ்சு போன கேஸ் ரவிக்குமார் இறந்து போய் இருக்கிறார். தன்னுடைய அப்பாவுடைய இறப்புக்கு தான் தான் காரணம் என்று குற்ற உணர்ச்சியோடு இருக்கிற தனுஷ் , இறந்து போன அப்பாவ அவர் ஆசைப்பட்டபடி அந்த நிலத்திலே புதைக்கணும்னு முடிவு பண்றாரு, ஆனால் அங்க வரும் வங்கி அதிகாரிகள் ஜப்தி பண்ண நிலத்துல புதைக்க விடமாட்டோம் என்று சொல்றதோட வாங்கின கடனையும் அடைக்க சொல்றாங்க. வட்டியோடு சேர்ந்து பல லட்சம் கடனை தனுஷால் அடைக்க முடிந்ததா? தன் அப்பாவின் ஆசையே நிறைவேற்றினாரா? தனுசு பழிவாங்கணும்னு காத்துகிட்டு இருந்த டிஎஸ்பி சுராஜ் மற்றும் தனுஷு க்கு இடையே என்ன நடந்தது ? என்பதுதான் ”கர” படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக கர சாமி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்க கூடிய தனுஷ் பாசமுள்ள மகனாக, நேசம் உள்ள கணவனாக ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்து தளங்களிலும் சிறப்பான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியிலும் கதாபாத்திரத்தின் உணர்வுகளை தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலம் கடத்தியுள்ள தனுஷ், எளிமையான, எதார்த்தமான மனிதர்களின் பிரதிபலிப்பை திரையில் வெளிப்படுத்தியுள்ளார்.கதையின் நாயகியாக செல்லி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மமிதா பைஜூ தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு முற்றிலும் பொருத்தமான நடிப்பை கொடுத்துள்ளார் .தனுஷின் தந்தையாக நடித்திருக்க கூடிய கே. எஸ். ரவிக்குமார் , அன்பான தந்தையாக, பழைமையான , எளிய மனிதர்களை நாம் திரையில் காணும் வண்ணமாக சிறப்பான தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சமீப காலங்களாக தன்னுடைய யதார்த்தமான நடிப்பின் மூலம், பல தமிழ் படங்களில் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி , ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று இருக்க கூடிய சுராஜ் வெஞ்சாரமூடு அவர்களுக்கு, இந்த படத்திலும் காவல்துறை அதிகாரியாக நல்லதொரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது அதனை அவர் தனது அற்புதமான நடிப்பின் மூலம் சிறப்பாக கையாண்டு ,மீண்டும் ரசிகர்களிடையே நல்ல பெயரை சம்பாதித்துள்ளார். மேலும் ஜெயராம்.. கருணாஸ் ,பிருத்திவி பாண்டியராஜ், ஸ்ரீஜா ரவிஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் குறைவில்லாத நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.,
ஒரு தனிமனித வாழ்வில் அவன் சார்ந்திருக்க கூடிய சமூகத்தினால் எப்படி எல்லாம் அவனது வாழ்க்கை பாதை மாறுபட்ட கோணங்களில் பயணிக்கிறது என்னும் கதைக்களத்தில் ,விவசாயிகளின் பிரச்சனை, வங்கிகளின் அணுகுமுறை இவற்றைப் பற்றிய கருத்துகளையும் இணைத்து, ஒரு நிறைவான படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் ராஜா.ஏற்கனவே போர்த்தொழில் படம் வாயிலாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள விக்னேஷ்ராஜா , மாஸ் ஹீரோ நாயகனாய் நடிக்கக்கூடிய படங்க.ளில் சொல்லப்படும் கருத்துக்கள் ஏராளாமான மக்களை சென்று சேரும் என்பதை உணர்ந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார்
இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையில் கண்ணம்மா கண்ணம்மா ,வாயா என் கர சாமி போன்ற பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன. திரைக்கதையோடு இணைந்து, பின்னணி இசை படம் முழுக்க நன்கு பயணித்துள்ளது .
கிராமத்து வாழ் சூழலையும், அங்குள்ள மக்களின் வாழ்வியலையும் தன்னுடைய நேர்த்தியான கேமரா கோணங்கள் ,தரமான ஒளியமைப்புகள் மூலம் சிறப்பாக படத்தினை காட்சி பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.
படத்துவப்பாளர் ஸ்ரீஜித் சாரங்கின் பணியானது, தெளிவான திரைக்கதைக்கும், விறுவிறுப்பான காட்சிகளுக்கும் பக்க பலமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ஆக்சன் ,சென்டிமென்ட், காதல் என எல்லாமும் கலந்த கதையில் சமூக கருத்துக்களையும் விதைகளாக தூவி செல்கிறது இந்த கர படம்.
