Tuesday, August 25

’வெப்பம் குளிர் மழை’ – விமர்சனம்

’கதையின் நாயகன் திரவ் , கதையின் நாயகி இஸ்மத் பானு தம்பதிகளுக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் ஆனாலும் பிள்ளைப்பேறு மட்டும் கிட்டவில்லை இதனை சொந்தபந்தங்களும் ,சுற்றத்தாரும் குறையாக பேசும் பேச்சுக்களினால் மனம் வருத்தும் அந்த தம்பதியினர், மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள். பரிசோதனையின் முடிவில் கணவனால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பது தெரிய வருகிறது ஆனால், இந்த உண்மையை கணவரிடம் கூறாமல் மறைக்கும் இஸ்மத் பானு, எடுக்கும் ஒரு முடிவினால் அவருக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. அந்த குழந்தையாலேயே தம்பதி இடையே பெரும் பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் என்ன நடந்தது ?என்பதே ‘வெப்பம் குளிர் மழை’.யின் எஞ்சிய திரைக்கதை ஆகும்.
கதையின் நாயகனாக திரவ் நடித்துள்ளார் முதல் படம் என்பதே தெரியாத அளவுக்கு மிக இயல்பான நடிப்பை ஆழமாக பதிவு செய்துள்ளார். யதார்த்தமான நடிப்பை கொடுத்து கதாபாத்திரத்துடன் நம்மை ஒன்றி பயணிக்க வைக்கிறார்.

கதையின் நாயகியாக. பாண்டியம்மா என்னும் கதாபாத்திரத்தில் இஸ்மத் பானு அச்சு அசலான கிராமத்து பெண்ணாக திறம்பட்ட நடிப்பை வெளிப்படித்தியுள்ளார் ,மேலும் எம்.எஸ்.பாஸ்கர், நாயகனின் தாயாக நடித்திருக்கும் ரமா, போன்றவர்களின் நடிப்பில் யதார்த்தம் இழையோடுகிறது .இவர்களோடு கூட அந்த ஊர் மண்ணின் மைந்தர்களாக வலம் வந்து இருக்கும் மற்றவர்களும் கதையின் களத்துக்கு நம்மை கையோடு அழைத்துசெல்லுகிறார்கள்..

 

இதுபோன்ற வாழ்வியல் கதைகளை மண்மணம் மாறாமல் பதிவு செய்யும் ஒளிப்பதிவும் அதன் உணர்வுகளுக்கு ஏற்ற இசையும் அவசியமானது ,அந்த வரிசையில் இந்த படத்துக்கு ப்ரீத்தி ராஜேந்திரனின் ஒளிப்பதிவும், சங்கர் ரங்கராஜனின் இசையும் பெரிய பக்க பலமாய் அமைந்துள்ளது .
எவ்வளவு சமூகம் முன்னேற்றம் அடைந்தாலும் இன்னமும் மக்கள் மனதில் புரையோடிக்கொண்டுள்ள பல பிற்போக்குத்தனமான எண்ணங்கள் அதானல் பாதிப்புகுள்ளாகும் தனி மனிதர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உணர்வு போராட்டங்களை அழுத்தமாக இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து இந்த படத்தில் பதிவு செய்துள்ளார் .எளிமையும் யதார்த்தமும் நிறைந்த யான கிராமீய பின்னணியில், பொருத்தமான நடிகர்களை கொண்டு நிறைவான படமாக இயக்குனர் கொடுத்துள்ளார்

மனித உணர்வுகளை பேசும் இந்த படம், பார்ப்பவர்களின் மனதில் ஆழமாய் பதியும் படமும் கூட .

Spread the love