வி.ஆர்.மணி சேயோன் இயக்கத்தில், சுந்தர்.சி, தன்யா ஹோப், ஹெபா பட்டேல், கமல் காமராஜ், மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘வல்லான்’

தொழில் அதிபர் ஒருவர் கொலை செய்யப்படுகிறார் ,அந்த கொலை வழக்கை புலனாய்வு செய்யும் காவல்துறைக்கு எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை, எனவே அந்த கொலை வழக்கை புலனாய்வு செய்ய பணி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி சுந்தர் சி இடம் உயர் அதிகாரி பொறுப்பை தருகிறார், தற்பொழுது காவல் துறையில் பணியில் இல்லை என்றாலும் கொலை செய்யப்பட்ட தொழிலதிபரின் அந்த வழக்கினை ஏற்றுக்கொள்ளும் சுந்தர் சி இதன் மூலமாக தன்னுடைய பிரச்சனைகளுக்கும் ஏதேனும் ஒரு வகையில் தீர்வுகள் கிடைக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் அந்த கொலை வழக்கு பற்றிய விசாரணையில் ஈடுபடுகிறார் .அந்தக் கொலைக்கு பின்னால் இருக்கக்கூடியவர்கள் யார் என்பதை அவரால் கண்டுபிடிக்க முடிந்ததா? இல்லையா? என்னும் வினாக்களுக்கான விடையினை ,விறுவிறுப்பான காட்சிகளால் சொல்வதே வல்லான் படத்தின் மீதி கதையாகும்.
கதையின் நாயகனாக உண்மை குற்றவாளிகளை புலனாய்வு செய்து கண்டுபிடிக்கும் காவல் துறை காவல் துறை அதிகாரியாக சுந்தர் சி சிறப்பாக நடித்துள்ளார். தன்யா ஹோப் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் குறைவில்லாத நடிப்பை கொடுத்துள்ளார். மற்றும் குறிப்பிட்டுச் செல்லக் கூடிய ஒரு கதாபாத்திரத்தில் ஹெபா பட்டேல் நடித்துள்ளார் .இவரும் தொழிலதிபராக நடித்துள்ள கமல் காமராஜ் மற்றும் தலைவாசல் விஜய், சாந்தினி தமிழரசன் போன்றவர்களும் அவரவர்களது கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளார்கள்.
சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் பயணிக்கும் கதை களத்தில் உள்ள படங்களுக்கு ஒளியும், ஒலியும் மிகவும் முக்கியமான இரண்டு அம்சங்கள் ஆகும், அந்த வரிசையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் மணி பெருமாளின் ஒளிப்பதிவு, ரசிகர்கர்கள் கதையோடு இணைந்து பயணிக்கும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசை ,விறுவிறுப்பான காட்சிகளுக்கு தேவையான வேகத்தினை மேலும் கூட்டும் வகையில் நன்கு அமைக்கப்பட்டுள்ளது ,பாடல்களும் கேட்டு ரசிக்கும் படி உள்ளன.
படத்தின் இயக்குனர் பி. ஆர். மணி செய்யோன், விறுவிறுப்பான ட்விஸ்ட்டுகள் நிறைந்த திரைக்கதையுடன், எடுத்துக்கொண்ட கதையை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் சிறப்பான படமாக உருவாக்கிக் கொடுத்துள்ளார். கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளதோடு, தன்னுடைய கதையை, காட்சி வடிவில் மேலும் சிறப்பாக்கிட, பொருத்தமான தொழில்நுட்பக் கலைஞர்களையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு இந்த படைப்பை உருவாக்கியுள்ளார்.
மொத்தத்தில் வல்லான் ரசிகர்களை ஈர்ப்பதில் வல்லவன்
