Sunday, April 19

குழந்தைகள் முன்னேற்றக் கழகம் – விமர்சனம்

குழந்தைகளின் உலகத்தில், அரசியல் பார்வையைச் சொல்லும் பொலிடிகல் காமெடி ஜானரில் உருவாகியுள்ள படம் குழந்தைகள் முன்னேற்றக் கழகம்

யோகி பாபுவின் 2 மனைவிகளுக்கும் இரண்டு மகன்கள் வாரிசுகள் இருவரும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள் ஒருவர் ஒரு வாரிசின் பெயர் பல்லவன் இமயவர்மன் மற்றொரு மகனின் பெயர் அலெக்ஸாண்டர் அத்வைத் பள்ளியில் படிக்கும் பொழுதே தங்களது தந்தையைப் போல அரசியல்வாதிகளின் குண இயல்புகளை சித்தரிக்கும் வண்ணமாக தேர்தல் தலைமை விளம்பரம் என்ற யுக்திகளோடு வளர்ந்து வருகிறார்கள் ,இவர்களது எண்ணம் போலவே அவர்களுடைய எதிர்காலம் அமையப்பெற்றதா? இல்லையா ?என்பதே குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தின் மீதி கதையாகும்.

முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு ஆதிமூலம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தனக்கே உரித்த பாணியில் அவரது உடல் மொழியும் ,வசன உச்சரிப்புகளும், ஒன்லைனர்களும் படம் முழுவதும் காணப்பட்டாலும் சில இடங்களில் மட்டுமே ரசிக்க வைக்கிறது.

.கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் இமயவர்மன் மற்றும் அத்வைத் இருவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தினை சரியான முறையில் உள்வாங்கி நன்கு நடித்துள்ளார்கள்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைப்படத்தில் நடித்திருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில் தன்னுடைய அனுபவ நடிப்பில் முத்திரை பதிக்கிறார் .மேலும் சுப்பு பஞ்சு, சித்ரா லட்சுமணன், மயில்சாமி என இதர கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பிற கலைஞர்களும் தத்தம் கதாபாத்திரங்களில் குறைவில்லா நடிப்பை நிறைவாக கொடுத்துள்ளார்கள்.

படத்தினை எழுதி இயக்கியிருக்கும் என் சங்கர் தயாள், .அரசியல் கதைகளத்தை நகைச்சுவையுடன் அணுக முயன்று இருக்கிறார் .அவருக்கு துணையாக சாதகப்பறவைகள் சங்கரின் இசையில் பாடல்களும். பின்னணி இசையும் ரசிக்கும்படி உள்ளன. ஒளிப்பதிவாளர் ஜே.லக்ஷ்மண் குமாரும் ,கதையின் காட்சிகளுக்கு இணக்கமான பின்புலத்தினை அழகுற பதிவாக்கியுள்ளார்.

. குழந்தைகளின் உலகின் வழியே, அரசியலை பொலிடிகல் காமெடி ஜானரில் அணுகியுள்ள படம் .

 

Spread the love