வடக்குப்பட்டி என்ற கிராமத்தில் வசிக்கும் ராமசாமி ஒரு சிறிய கோயிலை கட்டி அதன் மூலம் வருவாய் பெற்று வாழ்ந்து வருகிறார் .இந்த சூழலில் அந்த ஊர் தாசில்தாருக்கும் அவருக்கும் இடையே நடக்கும் பூசலால் அந்த கோயிலுக்கு சீல் வைக்கப்படுகிறது.மூடப்பட்ட கோவிலை திறக்க ராமசாமியின் முயற்சிகள் என்ன ?அந்த கோயில் மறுபடியும் திறக்கப்பட்டதா? இல்லையா?அத பின் நடித்தது என்ன?இது நகைச்சுவையுடன் சொல்லும் விதமாக அமைந்துள்ளது படத்தின் மீதி கதை.
கதையின் நாயகனாய் கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சந்தானம் தன்னை நம்பி வந்த ரசிகர்களுக்கு முழு நீள காமெடி விருந்து படத்துள்ளார்,.அவருக்கே உரித்தான பஞ்ச் கவுன்ட்டர்களில் அரங்கத்தில் காமெடி அதிர்வலைகளை அள்ளிவீசுகிறார் ,அவருடன் சேஷு,மாறனும் சேர்ந்து நகைச்சுவை ராஜாங்கம் நடத்தியுள்ளார்கள், மேலும் மேகா ஆகாஷ், எம்.எஸ். பாஸ்கர், ரவிமரியா, ஜான் விஜய், கூல் சுரேஷ், நிழல்கள் ரவி, தமிழ், மொட்டை ராஜேந்திரன் என பலதரப்பட்ட நடிகர்களும் தங்களுக்கே உரித்த தனி பாணியில் நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார்கள்.
டிக்கிலோனா’ படத்துக்குப் பிறகு சந்தானத்துடன் மீண்டும் இணைந்துள்ளார் படஇயக்குநர் கார்த்திக் யோகி,நகைச்சுவை நிறைந்த திரைகதையில் பொருத்தமான நடிகர்களை கொண்டு முழுநீள பொழுது போக்குபடமாக இந்த படத்தையும் கொடுத்துள்ளார் .
ஷான் ரோல்டனின் பின்னணி இசை கதையின் நகர்வுக்கு ஏற்ப பயணித்தாலும் பாடல்களில் இன்னுமும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒளிப்பதிவாளர் தீபக் கதைக்கும், காட்சிகளுக்கும் ஏற்ற வண்ணம் தன் பங்களிப்பை கொடுத்துள்ளார் .

காட்சிகளுடன் ஒன்றிப்போகும் நகைச்சுவையுடன் இருக்கும், இந்த முழு நீள காமெடி கலாட்டா நல்ல பொழுதுபோக்குப்படம்.
