கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற 12 ஆம் வகுப்புத் தேர்வில் ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் பல வாழ்வியல் சூழலுக்கு தற்போது சென்று இருந்த காலத்தில், அப்போது நடைபெற்ற தேர்வில் முறைகேடு நடந்ததாக 10 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 2018 ஆம் ஆண்டு தீர்ப்பு அளிக்கப்படுகிறது.அதனால் அங்கு படித்த அந்த மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடுகின்றது. அதன்படி மீண்டும் அந்த மாணவ, மாணவியர் தேர்வு எழுத தாங்கள் படித்த பள்ளிக்கு மீண்டும் வருகிறார்கள் .இந்த மாணவர்களில் 10 ஆண்டுகளாக காதலை மனதில் கொண்டு இருந்த கார்த்திக் (ரக்ஷன்) இப்போதாவது பிரியதர்ஷினி(மலினா) மீது தான் கொண்ட காதலை சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்கிறார், மீண்டும் பள்ளி பருவக்காலத்துக்கு வந்த அந்த மாணவர்கள் சந்தித்த சம்பவங்கள் என்னென்ன? மேலும் கார்த்திக்கின் காதல் என்னவாயிற்று ? போன்ற , வினாக்களுக்கு விடையை சொல்லும் வண்ணம் விரிகிறது படத்தின் மீதி திரைக்கதை.
கதையின் நாயகனாக நடித்துள்ள ரக்ஷன் இன்றைய இளைஞர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நன்கு நடித்துள்ளார் நாயகியாக மலினா நடித்துள்ளார் கிடைத்த பாத்திரத்தில் குறைவின்றி நடித்துள்ளார்.கார்த்திக்கின் நண்பனாக வரும் தீனா தனித்தன்மையுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.ஒவ்வொருவரும் மீண்டும் வாழ்ந்து பார்க்க ஆசைப்படும் பருவமான பள்ளி பருவத்தை மறுபடியும் பார்க்க வாய்ப்பு கிடைக்கும் இளைஞர்களின் வாழ்வியலை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் யோகேந்திரன்..
.ஒளிப்பதிவாளர் கோபி துரைசாமியின் கைவண்ணத்தில் கன்னியாகுமரியின் அழகும் சிறப்பாக பதிவு செய்யப்படுள்ளது ,சச்சின் வாரியரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளன.
எல்லாருடைய மனதிலும் மறக்கமுடியாத நினைவுகளை சுமந்து கொண்டுள்ள பள்ளிப்பருவ காலத்தை பதவி செய்துள்ள இந்த மறக்குமா நெஞ்சம் படம் பார்ப்பவர்களின் நெஞ்சங்களில் பல நினைவுகளை நிச்சயம் மலர செய்யும்.
