Sunday, April 19

’தி அக்காலி’- திரைப்பட விமர்சனம்

இயக்குனர் முகமத் ஆசிப் ஹமீது இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர்- த்ரில்லர் படம் தி அக்காலி.

போதைப்பொருள் கடத்தலை பற்றி அறிந்து அதனை தடுக்க விசாரணையில் ஈடுபடுகிறார் காவல் அதிகாரி ஜெயகுமார்.அங்குள்ள கல்லறை ஒன்றில் போதைப் பொருட்களைப் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் அவருக்கு கிடைக்கிறது அதனை பற்றி கண்காணிக்கச் செல்லும்போது, அவர் பல அதிர்ச்சிகமரான உண்மைகளை அறிந்துகொள்ளுகிறார் சாத்தானை வழிபடும் கூட்டத்தினர் அந்த பகுதியில் பல விதமான வித்தியாசமான பூஜைகள் செய்வதை அறிகிறார் . அந்த கூட்டத்தினர் யார்?என்பதை கண்டுபிடிக்க முழு முனைப்புடன் செயல்படும் ஜெயகுமார் அந்த முயற்ச்சியில் வெற்றி பெற்றாரா ? என்பதே ‘தி அக்காலி’ படத்தின் மீதி கதை.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜெய்குமார், கிறிஸ்துவ மத போதகராக நடித்திருக்கும் நாசர் இருவரும் தங்களுடைய அனுபவ நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்கள் மேலும் தலைவாசல் விஜய், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், தாரணி, என பலரும் தத்தம் கதாபாத்திரங்க ளின் தன்மைக்கு ஏற்ற வண்ணம் நன்கு நடித்துள்ளார்கள்.

இதுபோன்ற கிரைம் திரில்லர் படங்களுக்கு ஒளியும் ஒலியும் மிகவும் முக்க்கியமானவை அந்த வகையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் கிரி முர்பி தனது சிறப்பான கோணங்கள் மற்றும் ஒளி அமைப்பின் மூலமும் அனிஷ்மோகன் தனது பின்னணி இசைமூலமும் ,ஒரு அமானுஷ்ய உலகத்துக்குள் ரசிகர்களை பயணிக்க வைக்கும் வகையில் காட்சிகளுக்கு உயிரோட்டதினை தந்துள்ளார்கள்.

கலை இயக்குநர் தோட்டா தரணியின் பங்களிப்பும் பாராட்டும் படி அமைந்துள்ளது, படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியன் காட்சிகளுக்கு விறுவிறுப்பை தந்துள்ளார்.

ஹாரர் த்ரில்லர் கதைக்களத்தில் இயக்குநர் முகமது ஆசிப் ஹமீது.எழுதி இயக்கியிருக்கும் இந்த படம் சரியான நட்சத்திர தேர்வு மற்றும் சிறந்த தொழில்நுட்பட கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது .இயக்குனர் புதுமையான கதைக்களத்துடன், விறுவிறுப்பான திரைக்கதையோடு நன்கு படத்தினை உருவாக்கியுள்ளார்.

’தி அக்காலி’ ஹாரர்- த்ரில்லர் ரசிகர்களுக்கு முழு நீள திகில் திரை விருந்து .

Spread the love