இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் சீரிஸ் “தலைமைச் செயலகம்”
ஊழல் வழக்கில் சிக்கி சிறை தண்டனை பெறும் நிலையில், நாட்டின் முதல்வராக கிஷோர் உள்ளார். கிஷோர் சிறைக்குச் சென்று விடும் சூழ்நிலையில் அவரது பதவியை கைப்பற்றும் நோக்கத்தில் அவரது மகள் ரம்யா நம்பீசன், மருமகன் மற்றும் ஆலோசகர் ஸ்ரேயா ரெட்டி ஆகியோருக்குள் போட்டி ஏற்படுகிறது . இந்த சமயத்தில் , ஜார்கண்ட் மாநிலத்தில் பல கொலைகளை செய்த துர்காவை சிபிஐ போலீஸ் தேடுகிறது, போலீஸ் அதிகாரியான பரத், தமிழகத்தில் நடக்கும் கொலை ஒன்றினை விசாரிக்கிறார், இவை அனைத்தும் ஒன்றிணைந்து பயணிக்கிறது, அதன் பின் நடப்பவை என்ன என்பதே இந்த திரில்லர் சீரிஸின் கதையாக விரிகிறது .
நடிகர்களை பொறுத்த வகையில் முதல்வராக நடித்துள்ள கிஷோர்,பரத் ,ரம்யா நம்பீசன், ஷ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் ,நிரூப் நந்தகுமார் என் அனைவரும் கதாபாத்திரங்களுடன் ஒன்றி நடித்துள்ளார்கள்..
அழுத்தமான பொலிடிகல் திரில்லராக இந்த சீரிஸை தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கியுள்ளார் ,அரசியல் களத்தில் பயணிக்கும் கதைக்கேற்ற நடிகர்களை தேர்வு செய்து, சிறப்பான காட்சிகளை கொண்டு, விறுவிறுப்பாக உருவாக்கியுள்ளார் வசந்தபாலன்.
ஜிப்ரானின் இசையும், வொய்டு ஆங்கிள் ரவிஷங்கரின் ஒளிப்பதிவும், ரவிக்குமாரின் படத்தொகுப்பும் இயக்குனரின் கதையோட்டத்துடன் பயணித்து காட்சிகளுக்கு ஏற்ற சிறப்பான முழு வடிவத்தை படைத்துள்ளது .
கதைக்கேற்ற பொருத்தமான தலைப்புடன் ,பொருத்தமமான காலசூழலில் ZEE5 இல் .வெளிவந்துள்ள இந்த சீரிஸ் சிறப்பானதொரு பொலிடிகல் திரில்லர்.
