Sunday, April 19

‘எலக்சன்’ – விமர்சனம்

ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ம் தேர்தல் காலசூழ்நிலைக்கு பொருத்தமாக வெளியாகியுள்ள படம்.

சமகால நிறைய அரசியல் நபர்களை நினைவு கூறும் நல்லசிவம் என்னும் கதாபாத்திரத்தில் (ஜார்ஜ் மரியம்). பெயருகேற்றவகையில் நல்லவராகவும் அவர் சார்ந்துள்ள கட்சியின் மீது நேசமும் ,விசுவாசமும் மிக்கவராகவும் உள்ளவர்,ஆனாலும் அவருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. நல்லசிவத்தின் மகன் நடராசனும் (விஜய் குமார்). அரசியலில் ஈடுபட அதனால் அவர் நேர்கொள்ளும் சவால்கள், அதன் பின் அவர்களது குடும்ப சூழல் இவற்றை சொல்லுகிறது ‘எலெக்சன்’ படத்தின் மீதி கதை.

‘உறியடி’, ‘உறியடி 2’, ‘ஃபைட் கிளப்’ போன்ற படங்களில் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆகி இருந்த நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும்இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு முந்தைய படங்களை காட்டிலும் நன்கு முன்னேற்றதுடன், கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளது

‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் ,அரசியல் கதை களத்தில் நடைபெறும் இந்த படத்தினை  இயக்கியுள்ளார்.’அயோத்தி’ படத்தில் நன்கு நடித்தி ருந்த பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி போன்ற பலரும் கொடுத்த கதாபாத்திரங்களுக்கேற்ற சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் இசையும் , சி. எஸ். பிரேம்குமாரின் படத்தொகுப்பும் படத்தின் காட்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் விதத்தில் இருந்தன.

‘எலக்சன்’ சமகால அரசியலை பேசும் இந்த திரைப்படம் பொருத்தமான தேர்தல் கால சூழ்நிலையில் வெளியாகியுள்ளதால் பார்க்கும் மக்களை எளிதாக சென்று சேரும்.

Spread the love