Monday, May 25

சரண்டர்-திரைவிமர்சனம்

இரண்டு விதமான கதையினையும் திரைக்கதையில் இரண்டற கலந்து, சிறு தொய்வும் இல்லாத திரைக்கதை வகையில அமைச்சு, விறுவிறுப்பாக படம் பார்க்கின்றவர்களிடம் சரண்டர் ஆகி இருக்கும் படம் சரண்டர்.தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில ரவுடியா இருக்கிற சுஜித் கிட்ட சில கோடிகளை கொடுத்து ஏரியாவுல ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக வேலைய செய்ய சொல்றாங்க. சுஜித்தும் அரசியல் வாழ்க்கையில அடித்தளமாக அமையப் போற இந்த வேலையை சரியா செஞ்சி முடிக்கணும்னு நினைக்கிறார் தன்னுடைய நம்பிக்கைக்குரிய ஆட்கள் மூலமா பத்து கோடி ரூபாய் பணத்த கைமாற்ற ,கடைசில பணம் காணாமல் போகுது,.காணாமல் போன 10 கோடி ரூபாயை எடுத்தது யாரு? அந்த பணம் எங்கே இருக்கு? தனக்கு துரோகம் செஞ்சவங்க யாருன்னு ? சுஜித்தும் அவருடைய ஆட்களும் கண்டுபிடிக்க முயற்சி செய்றாங்க.,மறுபுறம் லால் நேர்மையாக யாருக்கும் வளைந்து கொடுக்காமல் இருக்கின்றதால் ,கடைசி வரை கான்ஸ்டபிள் ஆகவே இருந்து இன்னும் ஆறு மாத காலத்தில அவருடைய பணி நிறைவடைய போகிற நிலையில உள்ள அவர் கண்ட்ரோலில் இருந்த நடிகர் மன்சூர் அலிகான் உடைய துப்பாக்கி காணாமல் போகுது, இந்த விஷயம் அந்த போலீஸ் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் அருளுக்கு தெரிய வர, அசிஸ்டன்ட் கமிஷனர் கிட்ட தகவல் சொல்லணும்னு முடிவு பண்றாரு ,ஆனா அதே ஸ்டேஷன்ல ட்ரைனிங் சப் இன்ஸ்பெக்டராக ஜாயின் பண்ணியிருக்கும் தர்ஷன் தேர்தலுக்குள்ளாக எப்படியாவது தேடி கண்டுபிடித்துவிடலாம் அப்படின்னு சொல்றாரு ,லால் மேலே இருக்கிற அக்கறையினால் தேர்தலுக்குள் எப்படியாவது காணாமல் போன துப்பாக்கிய யாருக்கும் தெரியாம விசாரணை செய்து கண்டுபிடிக்கணும்னு உத்தரவு போடுறாரு ,அப்படி கண்டுபிடிக்க முடியலன்னா வேற வழியே இல்லாம லால் பத்தி அசிஸ்டன்ட் கமிஷனர் கிட்ட சொல்லிடுவேன்னு சொல்றாரு ,இதற்கு அனைவரும் சம்மதிக்கிறாங்க ,காணாமல் போன துப்பாக்கி எங்க போச்சு என்ற விசாரணைய ஆரம்பிக்கிறாங்க ,ஒரு பக்கம் தேர்தல் பணிகள் இன்னொரு பக்கம் காணாமல் போன துப்பாக்கி ,இரண்டுக்கும் மத்தியில, லால எப்படியாவது காப்பாத்தணும்னு நினைக்கிறாரு தர்ஷன்.தேர்தல் நாள் நெருங்க இரண்டு தரப்பும் தங்களுடைய விசாரணையை தீவிர படுத்தறாங்க, கடைசில காணாமல் போன பணம் என்ன ஆச்சு , காணாமல் போன துப்பாக்கிய யார் எடுத்தாங்க? எதனால எடுத்தாங்க? திரும்ப கிடைச்சதா ?இல்லையா? லாலுடைய நிலைமை என்ன ஆச்சு? தர்ஷன் உடைய நோக்கம் நிறைவேறியதா? இதுதான் சரண்டர் படத்துடைய மீதி கதை.

கதையின் நாயகனாக கதாபாத்திரத்துக்கு ஏத்த மாதிரி நடிச்சிருக்கிற தர்ஷன் ஒரு டிரெய்னிங் எஸ் ஐ எப்படி இருப்பாங்களோ அதே போல மிகச் சரியாக பொருத்தமாக தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். மிடுக்கான அவருடைய தோற்றமும், இயல்பான நடிப்பும் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கு.ஆர்ப்பாட்டம் இல்லாம ஆக்ரோஷமான சண்டை காட்சிகள் இல்லாத கதாநாயகியுடன் டூயட் பாடாமல் தர்ஷன் எடுத்து இருக்கின்ற புது முயற்சிக்கும் யதார்த்தமான நடிப்புக்கும் வாழ்த்துக்கள் சொல்லலாம்

வழக்கம் போலவே தனக்கு கொடுக்கப்படுகின்ற கதாபாத்திரமாகவே மாறுகின்ற வித்தையை லால் இந்த படத்திலும் செய்திருக்கிறார் ,பெரியசாமி கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி பன்முக தன்மையும் பல பரிமாணங்களும் கொண்ட கதாபாத்திரத்தை சற்றும் மிகைப்படுத்தாமல் மிகச்சரியாக படத்துக்கு பலமாக நடித்து நம் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார் லால். சுஜித்தின் ரவுடிசமும், முனீஸ் காந்தின் நகைச்சுவையும் அருளின் நடிப்பில் ஆங்காங்கே வெளிப்படும் மனிதாபிமானமும் படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களின் கதாபாத்திரங்களும் சரண்டர் படத்திற்கு சப்போர்ட்டாக அமைந்திருக்கு.

சரியாக எடிட்டிங் செய்திருக்கும் ரேணுகோபாலும், விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்திற்கு ஏற்ப வேகமாக தன்னுடைய ஒளிப்பதிவை செய்திருக்கின்ற மகேந்திரனின் ஒளிப்பதிவும், திரைக்கதையின் வேகத்திற்கு ஏற்ப அதிக சத்தம் இல்லாமல், சுவாரசியமும் குறையாமல் ,பின்னணி இசையும் கொடுத்திருக்கின்ற விகாஷும், நேர்த்தியான திரைக்கதைக்கு, நேர்மையான பங்களிப்பை கொடுத்து படத்திற்கும் பலம் சேர்த்திருக்காங்க.

இரண்டு நிகழ்வுகளை படத்தின் மையக்கருவாக எடுத்து இரண்டிற்கும் அழகான ஒரு தொடர்பு ஏற்படுத்தி பொருத்தக்கூடிய காரணங்களை அமைச்சு, கதைக்குத் தேவையான கதாபாத்திரங்களை மட்டுமே அமைத்து அந்தந்த கதாபாத்திரங்களுக்கு மிகச் சரியான நடிகர்களை தேர்வு செய்த்து ,புது கூட்டணியில் விறுவிறுப்பாக திரைக்கதையை கொடுத்து, வழக்கமான பாதையில் பயணிக்காமல், தன் முதல் படத்தை கொடுத்து மக்களின் மனதில் சரண்டர் ஆயிருக்கும் இயக்குனர் கௌதமன் கணபதிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் சொல்லலாம்.

Spread the love