Monday, May 25

சென்னை பைல்ஸ்- முதல் பக்கம்- திரைவிமர்சனம்

அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

கதையின் நாயகன் வெற்றியின் தந்தை ஒரு பிரபல எழுத்தாளர், அவரது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதும் பத்திரிக்கையாளர் ஷில்பா மஞ்சுநாத்துக்கு உதவி செய்வதற்காக வெற்றி சென்னைக்கு வருகிறார் அங்கு இன்ஸ்பெக்டராக பணி புரியும் தம்பி ராமய்யாவுடன் ஏற்படும் நட்பின் காரணமாக, கொலை குற்றம் ஒன்றை செய்தவர் யார் என்பதை கண்டுபிடிக்க தம்பி ராமையாவிற்கு வெற்றி உதவுகிறார், இதே போல் அடுத்தடுத்து பல உதவிகளை அவருக்கு வெற்றி தொடர்ந்து செய்து வருகிறார், இப்படிப்பட்ட சூழலில் சென்னையில் பல இளைஞர்கள் முகம் கொடூரமாக சிதைக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள், இந்த கொலைகளை செய்யும் கொலைகாரனை கண்டுபிடிப்பதற்கும் வெற்றியுடன் இணைகிறார் தம்பி ராமையா. அந்த கொலைகாரன் யார் ?எதற்காக அந்த கொலைகளை செய்கிறான்? இதுபோன்ற கேள்விகளுக்கு விடைகளை சொல்கிறது படத்தின் மீதி கதை

தொடர்ந்து கதைக்கும் ,கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் வெற்றி,இந்த படத்திலும் ஒரு புதுமையான கதையில் ,வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நன்றாக நடித்துள்ளார் வெற்றி . இதற்கு அடுத்தபடியாக இன்ஸ்பெக்டராக வரும் தம்பி ராமையா வழக்கமான தனது பாணி நடிப்பில் இயல்பாக நடித்துள்ளார்.ஷில்பா மஞ்சுநாத் தனக்கு கொடுக்கப்பட்ட  கதாபாத்திரத்தில் குறை காண முடியாத அளவிற்கு நிறைவாக நடிப்பினை தந்துள்ளார் .மேலும் மகேஷ்தாஸ், ரெடின் கிங்ஸ்லி போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.ஒளிப்பதிவாளர் அரவிந்த், இசையமைப்பாளர்  AJR, படத்தொகுப்பாளர்  விஷால் என்னும் மூன்று முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்களும் ,இந்தப் படத்தின் கதையோட்டத்திற்கும், திரைக்கதையின் காட்சிகளுக்கும் , தங்களால் இயன்ற அளவிற்கான ஒத்துழைப்பை கொடுத்துள்ளார்கள்.

கிரைம் திரில்லர் ஜானரில் , சோசியல் மெசேஜையும் இணைத்து ,கதைக்கு பொருத்தமான நடிகர்களையும் நடிக்க வைத்து ,இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் அனீஸ் அஷ்ரஃப்.

Spread the love