Thursday, December 5

சூர்யா, சிவா, KE ஞானவேல் ராஜா, மற்றும் UV Creations  ‘சூர்யா42’ படத்தின் மனதை மயக்கும் மோஷன் போஸ்டர்

சமீபத்தில் ‘சூரரைப் போற்று’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், பன்முகத் திறனுக்காக அகாடமி விருதுகளில் (ஆஸ்கார்) உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு கௌரவ அங்க்கீகரத்தையும் பெற்றிருக்கும் தென்னிந்திய முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குநர் சிவா இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார். Studio Green & UV Creations நிறுவனங்கள் சார்பில் வம்சி கிருஷ்ணா,  பிரமோத் & KE ஞானவேல் ராஜா இப்படத்தினை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா42’ என தலைப்பிடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இப்படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டரில் சூர்யா  கூர்மை மிகு போர் வீரனாக, மிடுக்கான தோற்றத்தில் அசத்தலாக இருக்கிறார்.  DSPயின் பின்னணி இசையும் விஷுவலும்  ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளிப்பதாக அமைந்துள்ளது.
மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்தில்  பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை பிரபல கமர்ஷியல் இயக்குநர் சிவா இயக்குகிறார்.  வலிமை மிகு வீரம் எனும் அடைமொழியுடன் வரும் டைட்டில் கதையின் தன்மையை சொல்வதாக அமைந்துள்ளது.

இப்படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பும், மற்ற விவரங்களும் விரைவில் ஒவ்வொன்றாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

நடிகர்கள்: சூர்யா, திஷா பட்டாணி மற்றும் பலர்
இயக்கம்: சிவா
இசை: ‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத். ஒளிப்பதிவு: வெற்றி பழனி சுவாமி.
கலை: மிலன்
எடிட்டர்: நிஷாத் யூசுப்
சண்டைக்காட்சிகள்: சுப்ரீம் சுந்தர்
இணை : எழுத்தாளர் : நாராயணா
வசனங்கள்: மதன் கார்க்கி
நடனம்: ஷோபி
உடைகள்: ராஜன்
காஸ்ட்யூம் டிசைனர் : தாட்சயணி, அனு வர்தன்
ஒப்பனை: குப்புசாமி
தயாரிப்பு ஒருங்கிணைப்பு: R S சுரேஷ்மணியன்
VFX: ஹரிஹர சுல்தான்
ஸ்டில்ஸ் : C.H.பாலு
விளம்பர வடிவமைப்பு: கபிலன் செல்லையா PRO: Suresh Chandra & Rekha D’One
தயாரிப்பு : K.E.ஞானவேல் ராஜா, வம்சி,பிரமோத்
பேனர்: Studio Green | UV creations.

  
Spread the love