Tuesday, March 18

“கேப்டன்”-திரை விமர்சனம்

தமிழ் படங்களில் ஹாலிவுட் பாணி பட கதையம்சத்துடன் கூடிய கதைகளைத் தந்த சக்தி செளந்தர் ராஜன், கேப்டன் படத்தில் ஏலியனை போன்றதொரு அரிய மிருகத்துடன் களமிறங்கியுள்ளார்,வெற்றி செல்வன் என்னும் கதாப்பாத்திரத்தில் ஆர்யா ராணுவ கேப்டனாக ஐந்து பேர் கொண்ட குழுவிற்கு தலைமை தாங்குகிறார். இக்குழு செக்டர் 42 என்ற பகுதியைத் தேடும் பணியில் ஈடுபடுகிறது இதற்க்கு முன்பாக அங்கு சென்ற ஒரு ராணுவ குழு பலியாகிறது. அப்படி அந்த பகுதியில் என்னதான் இருக்கிறது என்பதை ஆராய செல்லும் ஆர்யாவின் டீம் பிரேட்டரிடம் சிக்கியதா? எப்படி அங்கிருந்து மீண்டது? அங்கே அந்த டீம் சந்தித்த சவால்கள் என்ன? அதை அவர்கள் முறியடித்தவிதம் ?இப்படிபட்ட பல வினாக்களுக்கு விடை சொல்லுகிறது எஞ்சிய படத்தின் கதை

வெற்றிச்செல்வன் என்னும் கதாபாத்திரத்தில் துடிப்பான ராணுவ அதிகாரியாக கம்பீரமாக நடித்துள்ளார் ஆர்யா.இவரது தோற்றமும் உடல்மொழியும் கதாப்பாத்திரத்திற்க்கு பலம் சேர்த்துள்ளது .ஐஸ்யவர்யா லஷ்மி கொடுக்கப்பட்ட காட்சிகளில் நிறைவாய் நடித்துள்ளார்

தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாய் நடித்துள்ளார் சிம்ரன் மேலும் காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல்நாத், இவர்களும் தங்களது பங்கினை குறையின்றி வழங்கியுள்ளார்கள்

யுவாவின் ஒளிப்பதிவு படத்தின் ப்ளஸ்களில் குறிப்பிட்டுசொல்லக்கூடியது ,இமானின் இசை மற்றும் பிரதீப்ராகவின் படத்தொகுப்பும் இயக்குனருக்கு துணை நின்றுள்ளன

ஸ்பேஸ் திரில்லராக உருவான டிக் டிக் டிக், வேம்பயர் திரில்லரன மிருதன், உயிருடன் வரும் டெடி பொம்மை சார்ந்த காதல் கதையான டெடி என ஒவ்வொரு படத்தையும் தமிழ்படைப்புலகத்திற்கு  தந்த சக்தி சௌந்தர்ராஜன் முற்றிலும் புதிதான களத்தில் ஏலியன் சர்வைவல் திரில்லராக ஆர்யா நடிப்பில் உருவாக்கியுள்ள திரைப்படம்  கேப்டன் . தமிழ் சினிமாவில் இவர் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள்பாராட்டி வரவேற்கபட வேண்டியது.

நம்மவூரில் ஒரு சயின்ஸ் பிக்ஷன் திரில்லர் கதைகளை பார்க்க ஆசைப்படும் ரசிகர்களை இவர் நெருங்கியிருக்கிறார் என்றே சொல்லலாம் .

Spread the love