Monday, November 16

பிரபலங்கள் முன்னிலையில் பிரமாண்டமாக அரங்கேறிய தேஜா சஜ்ஜா – மௌரியா நிச்சயதார்த்தம்!

தேஜா சஜ்ஜா – மௌரியா நிச்சயதார்த்தம்: பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் வாழ்த்து!

‘ஹனுமான்’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் ‘சூப்பர் ஹீரோ’வாக உருவெடுத்துள்ள இளம் நடிகர் தேஜா சஜ்ஜாவுக்கும், மௌரியாவுக்கும் இன்று ஐதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா நட்சத்திர விடுதியில் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. இருவீட்டாரின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் முன்னிலையில் இந்த விழா இனிதே நடந்து முடிந்தது.

இந்த சிறப்புமிக்க நிகழ்வில் ‘மெகாஸ்டார்’ சிரஞ்சீவி, மாண்புமிகு தெலுங்கானா ஆளுநர் திரு. சிவ பிரதாப் சுக்லா, மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி, தெலுங்கானா திரைப்பட துறை அமைச்சர் திரு. கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி, அமைச்சர் திருமதி. சீதக்கா, முன்னாள் அமைச்சர்கள் திரு. ஹரீஷ் ராவ், திரு. கண்டா ஸ்ரீனிவாச ராவ் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், தெலுங்கு திரையுலகமே திரண்டு வந்து மணமக்களுக்கு தங்களது ஆசிகளை வழங்கியது. இவ்விழாவில் பழம்பெரும் இயக்குநர் கே. ராகவேந்திர ராவ், தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், சுரேஷ் பாபு, தில் ராஜு, டி.ஜி. விஸ்வ பிரசாத், சுஷ்மிதா கொனிடேலா, சாஹு கரபதி, வெங்கட் போயனப்பள்ளி ஆகியோர் பங்கேற்றனர்.

நடிகர்கள் ஸ்ரீகாந்த், ரவி தேஜா, நானி, ராணா டகுபதி, அதிவி சேஷ், சுதீர் பாபு, வரலட்சுமி சரத்குமார், நிதி அகர்வால், நிஹாரிகா கொனிடேலா, ரித்திகா நாயக், இமான்வி மற்றும் முன்னணி இயக்குநர்கள் பி. கோபால், அனில் ரவிபுடி, பிரசாந்த் வர்மா, சிவா நிர்வாணா, நந்தினி ரெட்டி, கார்த்திக் கட்டம்னேனி, மாருதி, சந்து மொண்டேட்டி, சைலேஷ் கொலானு, பி.வி.எஸ். ரவி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஏராளமான திரை நட்சத்திரங்களும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்ட போதிலும், தேஜா சஜ்ஜாவின் குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவுகளுக்கும் இடையிலான ஒரு நெகிழ்ச்சியான மற்றும் மனமார்ந்த குடும்ப விழாவாகவே இது அமைந்திருந்தது.

அன்பும், மகிழ்ச்சியும், மனமார்ந்த ஆசிகளும் நிறைந்த இந்த இனிய தருணத்தின் மூலம் தேஜா சஜ்ஜா மற்றும் மௌரியா தங்களது வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளனர். இவர்களது திருமணம் வரும் டிசம்பர் மாதம் பிரம்மாண்டமான முறையில் ‘டெஸ்டினேஷன் வெட்டிங்’ (Destination Wedding) ஆக நடைபெறவுள்ளது.

புதிய வாழ்வில் அடியெடுத்து வைக்கும் தேஜா சஜ்ஜா – மௌரியா ஜோடிக்கு எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு காலம் மகிழ்ச்சியுடன் வாழ மனமார்ந்த வாழ்த்துகள்!

Spread the love