2013-ஆம் ஆண்டு இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 2013-ஆம் ஆண்டு வெளியான ‘சூது கவ்வும்’ படத்தின் தொடர்ச்சியாக மிர்ச்சி சிவா நடிப்பில் எஸ்.ஜே.அர்ஜுன்..இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘சூது கவ்வும் 2’.
சூது கவ்வும் இரண்டாம் பாகத்தில் கருணாகரன் நிதியமைச்சராக உள்ளார்,அவரை மிர்ச்சி சிவா மற்றும் அவரது கடத்தல் கேங் திட்டம் போட்டு கடத்துகிறது.அதன்பின் நடைப்பவை என்ன ?என்பது தான் இந்த படத்தின் கதை.ஹீரோவாக மிர்ச்சி சிவா. வழக்கமான அவரது ட்ரெண்டில் நடித்துள்ளார், தனது பிராண்ட் வசனங்களில் ரசிகர்களை கவர முயற்சிக்கிறார் மேலும் கருணாகரன் ,எம்.எஸ்.பாஸ்கர், வாகை சந்திரசேகர், ராதா ரவி, ஹரிஷா ஜஸ்டின் போன்றவர்களின் நடிப்பு கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப குறை சொல்ல முடியாத வண்ணம் இருந்தது.

இயக்குனர் இயக்குனர் S .J அர்ஜுன் படத்தின் எதிர்பார்ப்பை ஈடு செய்ய திரைக்கதையில் போதிய கவனமும் ,காட்சிகளில் புதுமையும் சேர்த்து இருக்கவேண்டும் .எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையில் பாடல்கள் ஓகே ரகம் ,ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசையும் கதையின் வழியே நன்கு பயணித்துள்ளது. ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே.தில்லை படத்தின் காட்சிகளின் தேவைக்கு ஏற்ப நன்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் .படத்தொகுப்பாளர் இக்னேசியஸ் அஸ்வின், படத்தின் காட்சிகளை கதையோடு பொருத்தி இணைத்து நன்கு பணி புரிந்துள்ளார்
முதல் பாகத்தின் பல சிறப்பு அம்சங்கள் இந்த இரண்டாம் பாகத்திலும் குறையாமல் அதிகரித்து அமைக்கப்பட்டுருந்தால்,இந்த இரண்டாம் பாக படமும் ரசிகர்களை இன்னமும் ஈர்த்து இருக்கும்.
