Sunday, April 19

ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ – திரைப்பட விமர்சனம்

ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில்,ஹைபர் லிங்க் திரில்லராக உருவாகியுள்ள படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ பிரசாத் முருகன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

திருமணம் செய்து கொண்டு கணவன் வீட்டுக்கு வரும் மதி (அஞ்சலி நாயர்)யின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள், .தன் சாதியின் மீது தீவீர பற்று கொண்டவரின் மகள் மாற்று சமூகத்தைச் சார்ந்த இளைஞரைப் பதிவுத் திருமணம் செய்யப்போவதை அறிந்து, அவர் மீது சினம் கொள்ளும் தந்தையாக தலைவாசல் விஜய், மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தனது காதல் மனைவியைக் காப்பாற்ற பணமில்லாமல் தவிக்கும் கணவராக பரத் , தன் மகளின் படிப்பிற்காக, கந்துவட்டிக்காரரிடம் கடன் வாங்கும் அபிராமிக்கு ஏற்படும் சிக்கல் , இப்படிப்பட்ட நான்கு மனிதர்களின் கைகளில் எதிர்பாராத விதமாக கிடைக்கும் ஒரு துப்பாக்கியால் அவர்களின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களின் தொகுப்பே இயக்குநர் பிரசாத் முருகனின் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’.படத்தின் காட்சிகளாக திரையில் விரிகிறது .

மனைவியை காப்பாற்ற பணத்திற்காக போராடும் கவனாக நடித்துள்ள பரத், பல பரிமாணிங்களில் தனது நடிப்பை சிறப்பாக பதிவு செய்துள்ளார் .தலை வாசல் விஜய் மற்றும் அபிராமியின் அனுபவ நடிப்பில் அவர்களது கதாபாத்திரங்கள் பாராட்டினை பெருகின்றன ,.மேலும் அஞ்சலி நாயர், கனிகா, ராஜாஜி, கல்கி ராஜன்,பி.ஜி.எஸ், பவித்ரா லக்ஷ்மி என  அவரது நடிப்பும் குறை காணாத வகையில் சிறப்பாக உள்ளது.

ஒளிப்பதிவாளர்கள் கே.எஸ்.காளிதாஸ் மற்றும் கண்ணாவின் ஒளிப்பதிவும் ,ஜோஸ் பிராங்க்ளின் பின்னணி இசையும் இயக்குனரின் கதையோட்டத்துக்கு பக்க பலமாய் நின்றுள்ளன.இது போன்ற கதை களங்களுக்கு நேர்த்தியான படத்தொகுப்பு மிகவும் அவசியமான ஒன்று ,அந்த வகையில் இந்த படத்தின் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷின் பங்களிப்பு காட்சிகளின் வேகத்துக்கு பெரிய உறுதுணையாக அமைந்துள்ளது.

நான்கு கதைகளின் மாந்தர்களையும் ,அவர்களின் வாழ்வியல் சூழலையும் தெளிவான திரைக்கதையுடன் .படமாக்கியுள்ளார் இயக்குநர் பிரசாத் முருகன்,

மொத்தத்தில், ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ இளம் ரசிகர்களை கவரும் .

Spread the love