Tuesday, April 21

செம்பி -விமர்சனம்

மைனா , கும்கி , படங்களில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு பாட்டி ,பேத்தி கதையை முன்னிலை படுத்தி , தன்னோட பாணியை பின்னணியாக்கி செம்பியாக உருவாக்கி இருக்கிறார் பிரபு சாலமன் .

மகளையும், மருமகனையும் தீ க்கு பலிகொடுத்துவிட்டு தன்னுடைய பேத்திய பொத்தி வெச்சி கோவை சரளா வளக்குறாங்க . மலையில கிடைக்குற பொருளை வெச்சி வயிறையும், வாழ்க்கையும் கஷ்ட்டப்பட்டு கடந்து போறாங்க . இப்படித்தான் ஒரு நாள் தேன் எடுத்து கடையில பேத்திய கொடுக்க சொல்றாங்க . மலையில் இருந்து கீழ வர வழியில 10 வயது சிறுமிய 3பேர் பாலியல் பலாத்காரம் செய்றங்க. ஹாஸ்பிடல்ல சேர்த்தஉடனே போலீஸ் ஸ்டேஷனுக்கும் தகவல் போகுது . இன்ஸ்பெக்டர் ஆகாஷ் விசாரணை செய்றாரு. அப்போதான் எதிர்க்கட்சி தலைவர் மகனும் , அவனது நண்பர்களும் குற்றவாளிகள் தெரியுது . நேர்மை மாதுரி நடிச்ச ஆகாஷ் குற்றவாளிகள் கிட்ட பேரம் பேசி முடிக்குறாரு . தன் பேத்திக்கு எப்படியாவது நியாயம் கிடைக்கணுமுன்னு நினைக்கற சரளாவுக்கு , கடைசியில ஒரு பஸ் அடைக்கலம் தருகிறது .அதிகாரம் , பணம் ,பதவி,பலம்கொண்ட மத்தியில் இது எதுவும் இல்லாத சிறுமிக்கு நியாயம் கிடைச்சதா ? இல்ல அந்த வட்டத்துக்குள்ள சிக்கிக்கொண்டாரா ? என்பதே செம்பியின் கதை .…

தமிழ் ,தெலுங்கு போன்ற பல மொழிகளில் 700க்கும் மேல படங்களில் கோவை சரளா நடித்து இருந்தாலும் செம்பியின் அம்மாச்சியாக வாழ்ந்து இருக்காங்க. இவங்களுக்கு இந்த கதாபாத்திரம் தான் என்ற எண்ணத்தை இத்தனை படங்களையும் தாண்டி எனக்குள்ள வேற இருக்குன்னு தன்னோட நடிப்புமூலமா சொல்லி இருக்காங்க . நீங்க செம்பிய மட்டும் முதுகில் சுமந்து ஓடல எங்க மனசையும் சேர்த்துதான்.பஸ் நடத்துனர்/ஓனர் தம்பிராமையா பலவிதமான மனிதர்களை தன்னோட பலவிதமான நடிப்பு மூலமா சமாளிக்குறது அற்புதம் . குறிப்பாக ரவுடி , மற்றும் போலீஸ்கிட்ட பேசுறதும் .மைண்டுவாஸ் மூலமா டப்பிங்ல பேசியிருப்பதும் பாராட்டுக்குறியது. விசில் இல்லாமல் நடத்துனராக நடித்த உங்களுக்கு டபுள் விசில்.அஸ்வின் குமார் இயக்குனரின் காட்சிகளாக இருந்தாலும் அதை அப்படியே எங்களுக்கு கொடுத்ததோட உங்க நடிப்பு மூலம் பரபரப்பு , பதற்றத்தை ஏற்படுத்தியதற்கு வாழ்த்துக்கள் .

செம்பியாக நடித்துள்ள நிலா மேலும் இந்த படத்தில் செம்பியாக நடித்துள்ள நிலா, நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா, ஞான சம்பந்தன் போன்றவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களின் தன்மை உணர்ந்து நன்கு நடித்துள்ளார்கள் .

கண்ணுக்கினிய இயற்கை காட்சிகளை ஒளிப்பதிவாளர் எம்.ஜீவன் அழகுற படமாக்கியுள்ளார் ,நிவாஸ் கே.பிரசன்னாவின் பின்னணி இசை காட்சிகளை மேலும் உயிரோட்டமாக்க உதவியுள்ளது .வாழ்வியலோடு அழகியலையும் ஒருங்கே இணைத்து படமாக்கி தருவதில் பிரபு சாலமன் எப்பவும் கை தேர்ந்தவர் என்பது யாவரும் அறிந்ததே, அதை இந்த படத்திலும் அவர் நிரூபித்து இருக்கிறார் என்றே சொல்லலாம்.

Spread the love