Tuesday, April 21

ராங்கி-விமர்சனம்

கதையின் நாயகியாக, தனியார் ஆன்லைன் செய்தி நிறுவனம் ஒன்றில் பத்திரிகையாளராக வேலை பார்த்து வரும் தையல் நாயகி என்ற பாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் கதைக்கு சிறப்பான திரைக்கதை அமைத்து அதை நிறைவான படமாக்கி உள்ளார் இயக்குனர் சரவணன்.

த்ரிஷாவின் அண்ணன் மகள் அனஸ்வரா ராஜன் மீது ஃபேஸ்புக் கணக்கு மூலம் வாலிபன்ஒருவன் விடுக்கும் மிரட்டலை பற்றிய விசாரணையில் தையல் நாயகி ஈடுபடுகிறார் விசாரணை வெளிநாடு தொடர்புகள் வரை நீளுகிறது இதனை பரபரப்பான செய்தியாக்கி கொள்கிறார் தையல் நாயகி (த்ரிஷா) ,அதன் பின் ஏற்படும் திருப்பமான சூழல்களிலிருந்து த்ரிஷா எப்படி மீண்டார் என்பதே படத்தின் கதை.

ஏற்கனவே கதையின் நாயகியாக த்ரிஷா பல படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் அவர்து திரை பயணத்தில் குறிப்பிட்ட சொல்லக்கூடிய படமாகத்தான் அமையும்.

த்ரிஷாவுக்கு அடுத்ததாக அவரது அண்ணன் மகளாக உள்ள அனஸ்வரா ராஜன் தனிக்கவனைத்தை பெரும் வகையில் நடித்துள்ளார்,மேலும் ஜான் மஹேந்திரன், லிசி ஆன்டனி, ஆலிம் போன்றோரும் நன்கு நடிப்பை வழங்கியுள்ளர்கள்

இனிமையான பாடல் ,மற்றும் வலுவான பின்னணி இசையோடு இசையமைப்பாளர் சி.சத்யாவும் ,சிறப்பான காட்சியமைப்புகளோடு ஒளிப்பதிவாளர் சக்திவேலும் ,இயக்குனரின் உணர்வுகளோடு பயணித்து தங்களது பணியை நிறைவாக செய்துள்ளார்கள்

ராங்கி – கதையின் நாயகிகளுக்கு பெருமை சேர்க்கும் படங்களில் இதுவும் ஒன்று.

Spread the love