Saturday, September 12

” சத்தம் இன்றி முத்தம் தா ” விமர்சனம்

கதையின் நாயகி பிரியங்கா திமேஷ் கொலையாளியிடம் இருந்து தப்பிக்கும் வேளையில் ​​ வாகனம் ஒன்று அவர் மீது மோதுகிறது. பிரியங்காவை காப்பாற்றும் ஸ்ரீகாந்த் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கிறார். பழைய கால நினைவுகள் யாவும் மறந்து போன ப்ரியங்காவிடம் தான்தான் அவள் கணவன் என்று கூறும் ஸ்ரீகாந்த் ,தன் வீட்டுக்கு ப்ரியங்காவை அழைத்துச் செல்கிறார். பின்னர் அவர் தனது கணவர் இல்லை என்றுப்ரியங்காவுக்கு தெரிய வருகிறது, ப்ரியங்காவிடம் ஸ்ரீகாந்த் தான்தான் கணவர் என்று ஏன் சொன்னார்?அதன் பின் நட ந்தவைகள் என்ன ?போன்ற பல கேள்விகளுக்கு விடையினை திருப்பங்களுடன் சொல்லியபடி நகர்கிறது மீதி கதை.

காதல் நாயகனாக பல படங்களில் வலம் வந்த ஸ்ரீகாந்த் புதிய பரிமாணத்தில் இதுவரை ஏற்காத கதாபாத்திரத்தில் நன்கு நடித்துள்ளார். கதையின் நாயகி பிரியங்கா திம்மேஷ் தன்னுடைய கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ற மன உணர்வுகளை பிரதிபலிப்பவராக நிறைவாக நடித்துள்ளார்
மேலும் இன்ஸ்பெக்டர் எட்வர்ட் என்னும் கதாபாத்திரத்தில் ஹரிஷ் பெராடியும் ரகுவாக வியானும் நன்கு நடித்து தங்களது பங்களிப்பை குறைவின்றி கொடுத்துள்ளார்கள்.

இதுபோன்ற கதை அம்ச படங்களுக்கு ஒளியும், ஒலியும் மிகவும் அத்தியாசமானது, அந்த வரிசையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜுபினும், ஒளிப்பதிவாளர் யுவராஜூம் இயக்குனரின் கதையோட்டத்துடன் இணைந்து பயணித்துள்ளார்கள். இயக்குனர் ராஜ்தேவ் இந்த படத்தினை இயக்கியுள்ளார்,.த்ரில்லர் கதைக்கேற்ற விறுவிறுப்பான ட்விஸ்ட்கள் இன்னுமும் இணைக்கப்பட்டு இருந்தால், அது மேலும் படத்தின் வேகத்தினை அதிகபடுத்தியிருக்கும்.

சத்தமின்றி முத்தம் தா – இந்த கிரைம் திரில்லரை பார்க்கலாம் ரசிக்கலாம் .

Spread the love