அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம், இருவரும் ஒரு பள்ளியில் படித்தபோது நடக்கும் சம்பவத்துக்கு அர்ஜூன் தாஸ் தான் காரணம் என்று நினைக்கும் காளிதாஸ் பல வருடங்களுக்கு பிறகு அர்ஜுன்தாஸ் படிக்கும் கல்லூரியில் சேர்கிறார், பள்ளியில் தனக்கு நடந்த சம்பவத்திற்கு, பழி தீர்க்க நினைத்து அர்ஜூன் தாஸிடம் காளிதாஸ் மோதுகிறார்.இந்த பல வருட பகையால் ஏற்படும் திருப்பங்களே போர் படத்தின் மீதி கதை.

அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், இருவருமே பிரபு மற்றும் யுவா என்னும் கதாபாத்திரங்களின் இயல்புக்கு ஏற்ற உடல் மொழியுடன் இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக சிறப்பாக நடித்துள்ளார்கள்.மேலும் T.J பானு, சஞ்சனா நடராஜன்,அம்ருதா ஸ்ரீனிவாசன், மெர்வின் ரோசரியோ, ஜான் விஜய் போன்றவர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிப்பை வழங்கியுள்ளார்கள்.
ஒரு கல்லூரி கால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டஇந்த திரைப்படத்தில் மாணவர்களின் ஈகோ மோதல்கள், ஊடல்கள் ,கூடல்கள் போன்ற உணர்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம் காட்சிகளை இயக்குனர் பிஜோய் நம்பியார் அமைத்துள்ளார் .
தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகியிருக்கும் போர்,கல்லூரி நாட்களை மீண்டும் நினைவூட்டும்.
