Saturday, April 25

சலார் மிகவும் உணர்வுப்பூர்வமான திரைப்படமாக இருக்கும் சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படம் குறித்து பிரபாஸ் !!

ஹொம்பாலே பிலிம்ஸ் சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்திற்காக தனது உருமாற்றம் குறித்து மனம் திறந்த பிரபாஸ்.

ஹொம்பாலே பிலிம்ஸ், சந்தேகத்திற்கு இடமின்றி இந்திய திரைப்படத் துறையில் மிகவும் மதிப்புமிக்க திரைப்படங்களை உருவாக்கும் முக்கியமான தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில், பாகுபலி நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் மற்றும் கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இந்தியாவே எதிர்பார்க்கும் படமாக சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் பிரமாண்ட வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

சமீபத்திய நேர்காணலில், பான் இந்தியன் ஸ்டார் பிரபாஸ் படம் குறித்துக் கூறுகையில் கதபாத்திரங்களுக்கிடையான உணர்வுப்பூர்வமான போராட்டத்தைச் சொல்லும் உணர்ச்சிகரமான படைப்பாக இப்படம் இருக்கும் மேலும் முதல்முறையாக ரசிகர்கள் படத்தில் ஒரு கதாப்பாத்திரமாக என்னைப் பார்ப்பார்கள் என்றார்.”

டிசம்பர் 22, 2023 அன்று படம் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. இன்னும் ஒரு வாரமே உள்ளதால், முன்னணி நடிகர் பிரபாஸிடம் சமீபத்திய நேர்காணலில் சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்தின் கதாபாத்திரத்திர மாற்றத்திற்காக அவரது உழைப்பு உருமாற்றம் மற்றும் அவர் செய்த முன் தயாரிப்புகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த பிரபாஸ், “நானும் பிரசாந்தும் இப்படத்திற்காக ஒன்றாக இணைந்தே வேலை செய்தோம், எனக்கு தோன்றிய அனைத்தையும் அவரிடம் சொன்னேன், அவர் நான் என்னனென்ன செய்ய வேண்டும் என்று சொன்னார். படத்திற்கு நான் சரியானது என்று நினைத்த சில உடல் மொழி பற்றி அவரிடம் சொன்னேன். அவரும் கூட நிறைய ஐடியா தந்தார். எந்தவொரு முக்கியமான காட்சிக்கு முன்பும் நாங்கள் விவாதிப்போம், நான் அந்த கதாபாத்திரத்தை அணுகும் விதம் குறித்து, நாங்கள் ஓய்வெடுக்கும்போதும், வேடிக்கையாக, பேசும்போதும் ஒன்றாக விவாதிப்போம் வொர்க்ஷாப் செய்தோம் என்றார். “

Spread the love