வட சென்னைபகுதியில் இளம் வயது முதலே கால்பந்தாட்டத்தில் ஆர்வம் மிக்கவனாக இருப்பவன் செல்வா (விஜயகுமார்) . அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் விளையாட்டில் சிறந்த வீரர்களாக்க வேண்டும் என்பதில் பெரிதும் விருப்பம் கொண்டவராக பெஞ்சமின் (கார்த்திகேயன் சந்தானம்) உள்ளார் . ஆனால் அவரது தம்பி ஜோசப்போ (அவினாஷ்), கிருபாவுடன்(ஷங்கர் தாஸ்) சேர்ந்து கொண்டு போதைப்பொருள்களை விற்பதை தொழிலாக கொண்டுள்ளார் , அவர்களின் இந்த செயலை பெஞ்சமின் (கார்த்திகேயன் சந்தானம்) கண்டிக்கவே அவிநாசும் , சங்கர் தாசும் சேர்ந்து பெஞ்சமினை கொலை செய்து விடுகின்றனர். இந்த கொலைப் பழியை ஏற்றுக்கொள்ளும் ஜோசப் சிறைக்கு சென்று விடுகிறார். பல ஆண்டுகளுக்கு பிறகு சிறைவாசத்திலிருந்து விடுதலையாகி வெளியே வரும் ஜோசப், கிருபாகரனின் அரசியல் வளர்ச்சியினை பார்க்கிறார்.ஜோசப் கிருபாவை பழிவாங்க இளைஞனான விஜயகுமாரை கொண்டு பழிதீர்க்க முயற்சி செய்கிறார்.அதன் பின் ஜோசப்பின் திட்டம் நிறைவேறியதா ? செல்வாவின் நிலை என்ன? என்பதே ‘ஃபைட் கிளப்’ படத்தின் மீதி கதை!
கதையின் நாயகனாய் சமகால இளைஞர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்துள்ளார் விஜய்குமார். மேலும் அவினாஷ் ரகுதேவன், கார்த்திகேயன் சந்தானம் , சங்கர் தாஸ், சரவண வேல் போன்றோரின் நடிப்பும் கதையின் களத்தோடு நன்கு பயணிக்கும் வகையில் நிறைவாக உள்ள,து நாயகி மோனிஷா மோகன் மேனனுக்கு இன்னுமும் காட்சிகள் கொடுக்கப்பட்டு இருக்கலாம்.
ஆக்ஷன் படங்களின் வேகத்துக்கு ஏற்ற வண்ணம் பக்க துணை நிற்பவை ஒளிப்பதிவும் பின்னணிஇசையும்தான் அதனை இந்த படத்தின் நல்ல கேமரா கோணங்களில், ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோவும், பின்னணிஇசையில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவும் சிறப்பாக வழங்கியுள்ளார்கள்.
விறுவிறுப்பான கதைக்கு இணையான வேகம் நிறைந்த திரைக்கதை காட்சிகளுடன் அப்பாஸ்.ஏ.ரஹ்மத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இன்றைய இளையதலைமுறையினரை இந்த ‘ஃபைட் கிளப்’ நிச்சயம் கவரும்.
