Saturday, January 24

சாரா- திரைப்பட விமர்சனம்

சாரா- விமர்சனம்


சாக்‌ஷி அகர்வால் கட்டுமானம் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார், சாட்சிக்கு நிறைய திருமண தடங்கல்கள் ஏற்பட்டு வருகின்றன,இந்த நிலையில் சாக்‌ஷி அவருடன் பணிபுரியும் விஜய் விஷ்வாவை காதலிக்கிறார். அவருடன் திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன, இந்த சூழ்நிலையில் செல்ல குட்டி தன் தோழியான சாக்‌ஷியை ஒரு இடத்தில் கடத்தி அடைத்து வைக்கிறார், ஏன் அவர் அவ்வாறு செய்கிறார் ?அதன் பின் நடந்தது என்ன ?என்பதுதான் சாரா படத்தின் மீதி கதை .

சாரா என்னும் மையக்கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் சாக்‌ஷி அகர்வால் நடித்திருக்கிறார். கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் ஏற்ற வகையில் தனது நடிப்பு திறமையினை வெளிப்படுத்தும் வகையில் அவர் நடித்துள்ளார். சாக்‌ஷி அகர்வாலின் காதலராக விஜய் விஷ்வாவும், இயக்குனர் செல்லக் குட்டியும் அவரவர் கதாபாத்திரங்களில் நன்றாக நடித்துள்ளார்கள் அதிலும் குறிப்பாக பல பரிமாணங்களில் தன்னுடைய நடிப்பு திறனை வெளிப்படுத்தும் வகையில் இயக்குனர் செல்லக் குட்டியின் கதாபாத்திரமும் அதனை அவர் வெளிப்படுத்தி இருப்பதும் பல முந்தைய நடிகர்களை நினைவு கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இருந்தாலும் சில காட்சிகளில் அவரது நடிப்பு மிகை நடிப்பாகவே காணப்படுகிறது.. மேலும் அம்பிகா மிரட்டல் செல்வா.யோகி பாபு. ரோபோ சங்கர். பொன்வண்ணன், தங்கதுரை போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் குறை காண முடியாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் .

சினேகன் மற்றும் அருண்பாரதியின் வரிகளில் , கார்த்திக் ராஜா இசையில், பாடல்கள் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் பரவாயில்லை என்றும் சொல்லும் வகையில் உள்ளது. ஒளிப்பதிவாளர் லட்சுமண் குமாரும் படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரகாமும் இயக்குனரின் கதையோட்டத்திற்கு ஏற்றவாறு படத்தின் காட்சிகளை அமைப்பதில் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். காதல், நட்பு ,ஆக்சன் ,திரில்லர் யாவும் கலந்த கதையை சில ட்விஸ்ட்களுடன் இயக்குனர் செல்லக்குட்டி படமாக்கி இருந்தாலும் திரைக்கதையில் இன்னமும் கவனம் செலுத்தி இருந்தால் அது ஒட்டுமொத்த படத்திற்கும் பலம் சேர்த்திருக்கும்.

Spread the love