ட்ரை கலர் பிலிம்ஸ் சார்பில் ஆர். மாதவன், சரிதா மாதவன், மூலன் பிக்சர்ஸ் சார்பில் வர்கீஸ் மூலன், விஜய் மூலன் இணைந்து தயாரித்து படத்தின் கதை, திரைக்கதை, எழுதி இயக்கியிருக்கிறார் ஆர். மாதவன்.இந்த படத்தில் ஆர். மாதவன், சிம்ரன், ரஜத் கபூர், ரவி ராகவேந்திரா, சாம் மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.மேலும் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
என்னை உருவாக்க, தூக்கம் இல்லாமல் ,இன்பம், துயரம், துக்கம் இது போன்ற விஷயங்கள் இல்லாமல் பல வருடங்கள், பல மாதங்கள், பலநாட்கள், என்னுடன் பயணித்து அவர்களின் கனவு முயற்சி போராட்டங்களை தா ண்டி என்னை உருவாக்க செய்து என்னை களத்தில் நிற்க வைத்து அதன்பின் ரெடி ஸ்டார்ட் 4,3,2,1 என்று சொல்லும் போது பலரின் உழைப்பு, முயற்ச்சி என்னும் சுமைகளை சுமந்து செல்லும் நான் வெறும் அக்னிப்பிழம்பை முதலில் கக்கிவிட்டு இந்த பூமியை விட்டு கிளம்புகிறேன் என பூமி தாய்க்கு எச்சரிக்கை கொடுத்து அதிரவைத்து விண்ணிற்குள் அசுரவேகத்தில் சென்று, நீல வண்ண மேகத்திற்க்குள் என் வெண் புகையை சில நொடிபொழுதுகளில் ஆக்ரோஷமாய் செலுத்தி, எனக்கு கொடுத்த அவர்களின் இலக்கை நான் தொட்டுவிட்டேன் என்றவுடன் என்னை உருவாக்கியவர்களின் முயற்ச்சி உழைப்பு, மகிழ்ச்சி இதை கண்டவுடன் நான் என் வேலையை அனாயாசமாய் பார்ப்பேன்…. என் பெயர் ராக்கெட்
இந்தியாவின் புகழ் பெற்ற விஞ்ஞானி நம்பி நாராயணன்மீது விண்வெளி சம்பந்தமான ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றார் என தேச துரோக வழக்கு பதிப்படுகிறது உடனே அவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் ஊர் மக்களால் அவமரியாதையும் அவமானமும் கிடைக்கிறது, அவர் கைது செய்யப்படுகிறார் பல வருட சட்டப்போராட்ட த்திருக்குபின் உச்சநீதிமன்றம் அவரை நிரபராதி என விடுதலை செய்கிறது சிலவருடங்களுக்கு பிறகு அவரை பேட்டி எடுக்க விரும்பும் சேனல் ஒன்றுக்காக சூர்யா அவரை interview செய்யும்போது flashback மூலமாக கதை நகர்கிறது
1966 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேரும் நம்பி நாராயணன் படிப்படியாக வளர்ந்து, அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பை பெறுகிறார் அங்கு நல்ல சம்பளத்துக்கு நாசா இவரை வேலைக்கு அழைக்க அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டு இந்தியா திரும்பி இஸ்ரோவில் வேலை பார்க்கிறார் நம்பி நாராயணன். ராக்கெட் தொழில் நுட்பத்தில் வல்லரசு நாடுகளாய் இருக்கும் ரஷ்யா, அமெரிக்கா நாடுகளின் தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார், நண்பர்கள் மூலம் பல தவல்களை தெரிந்துகொள்கிறார் நம்பி நாராயண் தனது திறமைளைப் பயன்படுத்தி முதல் முறையாக இந்தியாவில் தனது குழுவுடன் இணைந்து ராக்கெட் ஏவுதல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு அதற்காக ரஷ்யா உருவாக்கிய இன்ஜின்களை இந்தியா கொண்டுவர விரும்புகிறார். அவற்றுடன் திரும்பும் நிலையில், சில பாகங்கள் பாகிஸ்தான் வழியில் கொண்டு வரும் சூழலில் அதிரடியாக தேச துரோக வழக்கில் கைது செய்யப்படுகிறார்,அவர் மீதான வழக்குகளில் இருந்து அவர் எப்படி மீண்டார்? தன் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானங்கள்,தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலிருந்து அவர் எப்படி மீண்டார் என்பதே மீதிக்கதை.
மாதவனின் இயக்கமும், நடிப்பும் படத்தின் பெரிய பிளஸ்பாயிண்ட் ஆக உள்ளது. இயக்குனருக்கு பக்க பலமாய் பிஜித் பாலாவின் படத்தொகுப்பும் , சிர்ஷா ரேயின் ஒளிப்பதிவும் மற்றும் ஷ்யாம். சிஎஸ் இசை மற்றும் பின்னணி இசையும் படத்தின் சிறப்பிற்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன