Friday, January 24

அன்யாஸ் டுடோரியல்- விமர்சனம்

Arka Media மற்றும் ஆஹா, ஆஹா ஒரிஜினல் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் அன்யா’ஸ் டுடோரியல்.

இந்த படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நிவேதிதா சதிஷ் , பிரமோதினி பம்மி , தர்ஷ் மற்றும் சிலர் நடித்து இருக்காங்க . ஒளிப்பதிவு விஜய் . கே .சக்கரவர்த்தி, மியூசிக் அரோல் கொரெலி , இயக்கம் பல்லவி கங்கிரெட்டி .

சின்னவயசுலேயே அப்பா இல்லாம அம்மாவுடன் ரெஜினா கசாண்ட்ரா, நிவேதிதா சதிஷ் வளர்ராங்க …ஒரு பழைய வீட்டுல இருக்கறாங்க ….அம்மா இல்லாதப்ப ரெஜினா தன்னோட தங்கச்சிய பேய் இருக்கறமாதிரி பயமுறுத்த அதுவே நிவேதா தனியா இருக்கறப்ப பேய் இருக்கறமாதிரி பயந்து போறாங்க … ஒரு கட்டத்துல ரெண்டு பேரும் வளர்ந்த பிறகு அக்கா தங்கச்சிகுள்ள அடிக்கடி சண்டை வந்து, இதனால நிவேதா கோவிச்சிக்கிட்டு வீட்டை விட்டு வெளியேறி வேற ஒரு வீடு பார்த்து அங்க போறாங்க …lockdown periodங்கறதால யாரும் வெளிய வராம இருக்கறாங்க ..நிவேதிதா புதுசா போன வீடு அபார்ட்மெண்ட் மாதிரி இருந்தாலும் அங்க இவ கள தவிர யாருமே கிடையாது..facebook , videocallன்னு இருக்கற நிவேதா ஒரு தடவை friendகளோட வீடியோ கால் பேசும்போது அங்க பேய் இருக்கறமாதிரி இவங்களும் நம்ப , friendsகளும் அவங்கள கவனமாய் இருக்க சொல்றாங்க … திரும்பி வரச் சொல்லுறாங்க … ஆனா நிவேதாவை ஈகோ தடுக்குது ..கடைசில அவங்க இருந்த வீட்டுக்குள்ள பேய் இருக்கா? இல்லையா? நிவேதா திரும்ப அவுங்க வீட்டுக்கு வந்தாங்களா? இல்லையா ? அப்படிங்கறதுதான் மீதிக்கதை .
ரெஜினாவும் நிவேதாவும் கதாப்பாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி நடிச்சதோட இருட்டுக்குள்ளேயும் அழகா இருக்காங்க… இரண்டு பேரும் video callல பேசுறப்ப modern உலகத்துக்குள்ள இருக்கற அக்கா தங்கச்சி யோட ஈகோ சண்டை தெரியுது …. ரெஜினாவும் அடிக்கடி tension .. அப்புறம் சமாதானம்.. கடைசில தவிப்பு அப்படிங்கற யதார்த்தமன நடிப்பை சரியா வெளிப்படுத்தியிருக்காஙக ….அதே மாதிரி பேய் இருக்கா இல்லையானு first halfல தவிக்கறதும், second halfல பே ய்கிட்ட மாட்டிகிட்டு முழிக்கறதுமின்னு நிவேதா சதீசும் நிறைவாய் நடிச்சுயிருக்காங்க …

படத்துக்கு மிக பெரிய பலமாக ரெண்டு தூண்களாய் DOP விஜய் K சக்ரவர்த்தியும் ,MUSICDIRECTOR அரோல்கொரிலும் இருக்காங்க …LIMITED ஆனா லொகேஷன்களில் படம் முழுவதும் இருந்தாலும் கதைக்கு ஏற்பட்ட மாதிரி பதிவு செஞ்சு கொஞ்சம் பயத்தையும் ஏற்படுத்தி இருக்காங்க… MUSICDIRECTOR அரோல்கொரிலின் பங்கும் அதே போலத்தான். பல இடத்துல பயத்தையும் ,சில இடங்களில் பேய் இருக்க இல்லையா இல்லை சின்ன வயசுல இருக்கறமாதிரி நிவேதாவுக்கு ஏற்படும் பிரைம்மையா என FIRST கொஞ்சம் குழப்பம் ஏற்படுது …இருந்தாலும் குறைவான கதாபாத்திரங்களை கொண்டு ஒரு திரில்லர் பட த்தை பல்லவி கங்கிரெட்டி . சிறப்பான முறையில் இயக்கி இருக்காங்க அப்படினு நிறைவாய் சொல்லலாம்.

Spread the love