Saturday, September 12

ரத்னம் -பட விமர்சனம்

இயக்குனர் ஹரி – நடிகர் விஷால் வெற்றி கூட்டணியில் தொடரும் அதிரடி ஆக்ஷன் விருந்து
சேர்ந்தே இருப்பது எது? என்று திருவிளையாடல் பாணியில் கேட்டால் இயக்குனர் ஹரியும் ,விறுவிறுப்பான ஆக்ஷனும் என்று சொல்லும் அள்வுக்கு அதிரடி திரை விருந்து தரக்கூடியது ரத்னம் படம் .கூடவே விஷால் வேறு கூட்டணி பிறகென்ன ? சொல்லவே வேண்டியது இல்லை எண்ணுமளவுக்கு வேகம் நிறைந்த அதிரடி மாஸ் திரைப்படமாக ரத்னம் அமைந்துள்ளது .

இளம் வயதில் தாயை இழந்து வாழும் ரத்னத்துக்கு (விஷால்) ஆதரவுக்கரம் நீட்டுகிறார் பன்னீர் செல்வம் (சமுத்திரகனி) அவருக்காக கொலை ஒன்றினை செய்துவிட்டு சிறுவர்சீர்த்திருத்த இல்லத்துக்கு செல்கிறார். அங்கிருந்து த்து தண்டனைக் காலம் முடிந்து வரும்போது, பன்னீர்செல்வம்.எம்எல்ஏவாக வளர்ந்து இருக்கிறார், அவருடனே அடியாளாக தொடர்ந்து அடிதடிகளில் ஈடுபட்டு வாழும் ரத்னம்.ஒருசமயம் மல்லிகாவை (ப்ரியா பவானி சங்கர்) சந்திக்கிறார். அவரை கொல்ல வரும் வில்லன்களுடன் மோதி,அவரை காப்பாற்றுகிறார் ,மல்லிகாவை வில்லன்கள் கொல்ல முயற்சிப்பது எதற்காக ?அதன் பின் நடந்தவை என்ன ?என்பதே மீதி கதை.

படம் முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வரும் விஷால் ,விறுவிறுப்பான அதிரடி காட்சிகளில் நன்கு நடித்துள்ளார். மல்லிகா கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரியா பவானி சங்கர்.கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளார் .மேலும் சமுத்திரக்கனி அவருக்கே உரித்தான கதாபாத்திரத்தில் , அளவுடன் நடித்துள்ளார் .ஆக்க்ஷன் படங்களுக்கு ஏற்ற வலுவான ஹீரோவுக்கு, பொருந்தக்கூடிய பலமான வில்லன்கள் அமைந்தால் அது இன்னுமும் கதைக்களத்துக்கு விறுவிறுப்பை தரும் ,அந்த வகையில் இந்த படத்தில் முரளி ஷர்மா, ஹரிஷ் பெராடி, முத்துக்குமார் போன்றோரின் நடிப்பு காட்சிகளின் வேகத்தினை கூட்டுகிறது. மேலும் கவுதம் வாசுதேவ் மேனன், ஜெயபிரகாஷ், மொட்டை ராஜேந்திரன், போன்றவர்களின் பாத்திரபடைப்புக்கள் கவர்கின்றன . யோகி பாபு தனக்கே உரித்த பாணியில் நடித்து ரசிக்க வைக்கிறார் இவர்களுடன் விஜயகுமார், டெல்லி கணேஷ் ஏற்றுள்ள கதாபாத்திரங்கள்,அவர்களது அனுபவ நடிப்புக்கு நன்கு பொருந்தும் வகையில் ந அமைக்கப்பட்டுள்ளது.

தேவிஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்கு மேலும் பலம் சேர்க்கும் வண்ணமுள்ளது. ஒளிப்பதிவாளர் சுகுமாரின் பங்களிப்பு படத்துக்கு மேலும் பிளஸ் ஆக அமைந்துள்ளது .இவர்களின் ஒலியும், ஒளியும் இயக்குனருக்கு பக்க பலமாய் அமைந்து, ரத்தினத்தை மேலும் ஜொலிக்க வைத்துள்ளது.

யோகி பாபு தனிக்கே உரித்த பாணியில் நடித்து ரசிக்க வைக்கிறார் கலகலக்க வைக்கிறார். மேலும் விஜயகுமார், டெல்லி கணேஷ் போன்றோரும் ஏற்றுள்ள கதாபாத்திரங்கள் அவர்களது அனுபவ நடிப்புக்கு பொறுந்தும் வகையில் நன்கு அமைக்கப்பட்டுள்ளது

இயக்குனர் ஹரி – நடிகர் விஷால் காம்போவில்,‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களுக்குப் பிறகு இது 3-ஆவது படம்.விறுவிறுப்பிற்கும் வேகத்துக்கும் ஏற்ப காட்சிகளை அமைத்து ,அதன் கூடவே சென்டிமெண்டையும் அளவுடன் இணைத்து, ஏற்கனவே பலப்படங்களில் அதிரடி இயக்குனராக தன்னை நிரூபித்துள்ள ஹரி, மீண்டும் இந்த படத்திலும் தன் முத்திரையை ஆழமாக பதித்துள்ளார்.

மொத்தத்தில் இந்த ரத்னம் ,விடுமுறை காலத்துக்கு ஏற்ற அதிரடி ஆக்ஷன் விருந்து.

Spread the love