Saturday, April 25

ஒரு நொடி- விமர்சனம்

ஒரு நொடி -சஸ்பென்ஸ் திரில்லர் கதை

மதுரையில் உள்ள சேகரன் ( எம்.எஸ். பாஸ்கர்) என்பவர், மகளின் திருமணசெலவுக்காக நிலத்தை அடகு வைத்து வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க செல்லும்போது காணாமல் போகிறார். அவரது மனைவி( ஸ்ரீ ரஞ்சனி) காவல்துறையில் தனது கணவரை காணவில்லை என்ற புகார் கொடுக்கிறார்,இந்த வழக்கை காவல் அதிகாரி பரிதிஇளமாறன்(தமன்குமார்) விசாரிக்கிறார். சேகரனுக்கு வட்டிக்குக் கடன் கொடுக்கும் கரிமேடு தியாகு (வேலா ராமமூர்த்தி) மீது காவல்துறைக்குச் சந்தேகம் உண்டாகிறது. இந்த விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே பார்வதி என்கிற பெண் மர்மாக கொலை செய்யப்படுகிறாள், காணாமல் போனவர் பாஸ்கர் மற்றும் கொலைசெய்யப்பட்ட இளம் பெண் என இந்த இரண்டு வழக்கினையும் தமன் கண்டுபிடிக்க புலனாய்வு செய்கிறார். இறுதியில் என்ன ஆனது ?காணாமல் போன எம்எஸ் பாஸ்கர் கிடைத்தாரா?பெண்ணின் கொலைக்கு யார் காரணம் ?பரிதிஇளமாறன் இரு வழக்கின் மர்மமுடிச்சுகளை கண்டு அறிந்தாரா ?என்பதே இந்த ‘ஒரு நொடி’ படத்தின் மீதி கதை ஆகும்.

கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடல் மொழியுடன் எடுப்பான தோற்றத்தில் தமன்குமார் நன்றாக நடித்துள்ளார் சமீப காலங்களில் பல படங்களில் யதார்த்தமான நடிப்பை தொடர்ந்து பதிவு செய்து வரும் எம்.எஸ் பாஸ்கர் இந்த படத்திலும் நிறைவாக நடித்துள்ளார் ,அவரது மனைவியாக நடித்துள்ள ஸ்ரீரஞ்சனியும் தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலமாக கவர்கிறார். மற்றும் வேல ராமமூர்த்தி.வில்லன் கதாப்பாத்திரத்தில் மிகையற்ற நடிப்பை அளவுடன் வெளிப்படித்தியுள்ளார் மற்றும் பல கருப்பையா, நிகிதா, தீபா என் யாவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நன்கு நடித்துள்ளார்கள்

சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்கு தேவையான விறுவிறுப்பான காட்சிகளை கொண்டு படத்தை கொண்டு சென்றதோடு எதிர்பார்க்காத முடியாத கிளைமாக்ஸையும் வைத்துள்ளார் இயக்குனர் மணிவர்மன்.

இதுபோன்ற சஸ்பென்ஸ் திரில்லர் கதைகளுக்கு தொழில் நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது அந்த வகையில் இந்த படத்தின் இசையினை சஞ்சய் மாணிக்கமும், ஒளிப்பதிவாளர் ரத்தீஷும் நம்மை .கதையோடு பயணிக்க வைக்கிறார்கள் .அவர்களுடன் சேர்ந்து படத்தொகுப்பாளர் குரு சூர்யாவும் தன்னுடைய பங்களிப்பையும் சிறப்பாக கொடுத்துள்ளார்.

சஸ்பென்ஸ் திரில்லர் கதை ரசிகர்களுக்கு நல்லதொரு கோடைவிடுமுறை திரைவிருந்து.

Spread the love