Monday, May 4

போகுமிடம் வெகு தூரமில்லை- சினிமா விமர்சனம்

மைக்கல் கே ராஜா இயக்கத்தில்,  விமல் ,கருணாஸ், ஆடுகளம் நரேன், மேரி ரிக்கெட்ஸ் மனோஜ் குமார்,  தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி மற்றும் பலர்  நடித்து நடித்துள்ளனர்.

 

கதையின் நாயகன்  குமார் (விமல்) சென்னையில் என்ற அமரர் ஊர்தியின் டிரைவராக உள்ளார் . பண தேவைக்காக இறந்த ஒரு  பெரியவரின் உடலை திருநெல்வேலிக்கு எடுத்து செல்கிறார் அந்த பயணம் செல்லும் வழியில் நளினமூர்த்தி (கருணாஸ்) என்னும்  கூத்து கலைஞர் ஒருவர் லிப்ட் கேட்டு அதே  வண்டியில் பயணிக்கிறார் .மாறுபட்ட மன நிலயில்  உள்ள இந்த இருவரும் பயணிக்கும் பாதையில்  பல எதிர்பாரத சம்பவங்கள் நிகழ்கின்றன  இறுதியில்  அந்த உடலை குமார் கொண்டு பொய் உரியவர்களிடம்  சேர்த்தாரா? உடன் பயணித்த நளினமூர்த்தியின் நிலை என்ன?இவற்றுக்கான பதில் படத்தின் மீதி கதையில் உள்ளது.

கதையின்நாயகனாய் அமரர் ஊர்தி ஓட்டுனராக  குமார் என்னும் கதாபாத்திரத்தில் விமல் நடித்துள்ளார், அவ்ருக்கு மாறுபட்ட  கதாபாத்திரத்தில் தன நடிப்பது வெளிப்படுத்த நல்லதொரு வாய்ப்பை இந்த படம் கொடுத்துள்ளது அவரும் அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நன்றாக  நடித்துள்ளார்

கூத்து கலைஞர் நளினமூர்த்தி என்னும் கதாபாத்திரத்தில் கருணாஸ் நடித்துள்ளார். இவரும் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில்  இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி  சிறப்பாக நடித்துள்ளார் .

மற்றும் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார் தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோரும் தத்தம் கதாபாத்திரங்களில்  நன்கு நடித்துள்ளார்கள் .

இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன ஒளிப்பதிவாளர் டெமில் சேவியர் எட்வர்ட்ஸின் கேமரா கதையின் வழியே பயணித்து காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது

ஒவ்வாருவரின் வாழ்வியலிலும்  இடம்பெறும் சம்பவங்கள்  ,சந்திக்கும் மனிதர்கள் அதனால் அவர்களது வாழ் க்கைப்பயணத்தில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய கதைக்களத்தினை கொண்டு இயல்பான காட்சிகள் ,யதார்தத்தை சித்தரிக்கும் கதாபாத்திரங்கள் என பயண வெளிக்காயினை நகு படமாக்கியுள்ளார் இயக்குனர் மைக்கல் கே ராஜா.

போகுமிடம் வெகு தூரமில்லையின் பயணத்தை  பார்த்து ரசிக்கலாம்

Spread the love