பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’.

மதுரையில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் வசிக்கும் மீனாவுக்கு (அன்னா பென்) பேய் பிடித்திருப்பதாக நினைக்கும் அவருடைய வீட்டாரும் அவரை திருமணம் செய்துகொள்ளப் போகும் மாமன் மகன் பாண்டி (சூரி) யும்ஒரு பேய் விரட்டும் சாமியாரிடம் கூட்டிசெல்லுகின்றார்கள் அந்தப் பயணத்தில் நடக்கும் சம்பவங்கள் என்ன ? மீனாவின் இந்த நிலை உண்மைதானா ? இந்த கேள்விகளுக்கு `கொட்டுக்காளி’.யின் மீதி கதை பதில் சொல்லுகிறது.
சூரி, அன்னா பென் இருவரின் நடிப்பும் சிறப்பாக உள்ளது ‘விடுதலை’, ‘கருடன்’ படங்களை போல இதுவும் சூரிக்கு பெரும் பெயரை பெற்றுத்தரும்..உணர்வுகளால் பேசும் இயல்பான கதாபாத்திரம் அன்னா பென்னுக்கு கொடுக்கப்படுள்ளது அவரும் தன்னுடைய தனிப்பட்ட பங்களிப்பை வழங்கியுள்ளார்.முக்கிய கதாபாத்திரங் களான சூரி, அன்னா பென் இந்த இருவரையும் தவிர படத்தின் ஏனைய நடிகர்கள் யாவரும் திரைக்கு புதுசு என்றாலும் நடிப்பில் புதியவர்கள் போல தெரியாதவண்ணம் இயல்பாக நடிப்பை கொடுத்துள்ளார்கள். 
படத்தின் காட்சிகளுக்கேற்ற இசை படத்தில் இல்லை, இயல்பான சத்தங்களே படத்தில் இடம் பெற்றுள்ளன.சிறப்பான லைவ் சவுண்ட் எபெக்ட்டில் படத்தின் ஒலி ஓசைகளை பதிவு செய்துள்ள, சூரன் மற்றும் அழகிய கூத்தன் என்னும் இரு ஒலி வடிவமைப்பாளார்களை நன்கு பாராட்டலாம். ஒளிப்பதிவாளர் .சக்தியின் கைவண்ணம், காட்சியை பதிவு செய்வதில் பாராட்டைப்பெறுகிறது .
வாழ்வியல் சூழலோடு பயணிக்கும் இந்த கதை, கிராமப்புற நம்பிக்கைகளையும், மக்களின் மனோநிலையினையும் நன்கு பதிவு செய்துள்ளது. .கூழாங்கல் படம் வாயிலாக ரசிகர்களின் தனி கவனம் பெற்ற இயக்குனர் பி.எஸ். வினோத் ராஜ், இந்தப்படத்திலும் தனி முத்திரை பதித்து உள்ளார்.
கொட்டுக்காளி-கிராமப்புற வாழ்வியலை, திரைமொழியில் சொல்லியுள்ளது.
