தமிழ் சினிமாவில் மீண்டும் விளையாட்டை, அதுவும் கபடி விளையாட்டை மையமாக கொண்டு கதைக்களம் காணும் மற்றுமொரு படமாக லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘பட்டத்து அரசன்’.
கபடி ஆட்டத்தில் வல்லவரான பொத்தாரி (ராஜ்கிரண்) பல கபடி போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான கோப்பைகளை பெற்றவர் , அவரைப்போலவே அவரது வாரிசுகளும் ஊருக்காக கபடி விளையாடியவர்கள், ராஜ்கிரண் குடும்பம் ஊருக்கு துரோகம் விளைவித்துவிட்டதாக அவர் மீது பழி விழுகின்றது அதனை துடைக்கும் பொறுப்பை ஏற்று கபடி விளையாடத் தெரியாத சின்னதுரை (அதர்வா) தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஊரை எதிர்த்து எப்படி வெற்றிபெறுகிறார் என்பதே பட்டத்து அரசனின் மீதி கதை.
கபடி வீரராகவும் அதர்வாவின் தாத்தாவாகவும் ‘பொத்தாரி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜ்கிரண், சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.பல படங்களில் தன்னுடைய குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்திவரும் ராஜ்கிரணுக்கு இந்த படத்திலும் வலுவான கதாபாத்திரம் .
கபடி வீரராக நடித்திருக்கும் அதர்வா, விளையாட்டு வீரருக்கான கதாபாத்திரத்துக்கு பொருந்தும் உடல் தோற்றத்துடன் ஒன்றி நடித்துள்ளார் காதல், வீரம்,சென்டிமென்ட் என அனைத்துகாட்சிகளிம் நன்கு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்,ஆஷிகா ரங்கநாதனுக்கு காதல், கபடி, பாடல் காட்சிகள் என தனக்கு கிடைத்த இடங்களில் தன் பங்குக்கு ஸ்கோர் செய்துள்ளார்.
ராஜ்கிரணின் மூத்த மகனாக ஜெயப்பிரகாசும் ,ராஜ்கிரணின் இளைய மகனான துரை சுதாகரும் மேலும் ராதிகா, சிங்கம் புலி, ராஜ் ஐயப்பன்,ஆர்.கே.சுரேஷ், ரவி காளே, பால சரவணன் என் பலரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கேற்ற வகையில் நடிப்பை வழங்கிருக்கிறார்கள் .
பொதுவாக விளையாட்டு போட்டிகளை கதைக்களமாக கொண்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளர் மற்றும் படத்தொகுப்பாளரின் பங்குகள் மிகவும் முக்கியமானது, அந்த வகையில் இந்த படத்திற்க்கு லோகநாதன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவும், ராஜா முகமதுவின் படத்தொகுப்பும் , படத்தின் வேகத்துக்கு பலம் சேர்த்துள்ளது அதேபோல் ஜிப்ரானின் இசையில் பாடல்கள் சிறப்பாக உள்ளன .படத்தின்பின்னணி இசையும் படத்தின் விறுவிறுப்புக்கு பெரிதும் பயன்பட்டுள்ளது .
குடும்ப உறவுகள் ,கபடிவிளையாட்டு இவைகளோடு ஆக்ஷன் ,சென்டிமென்ட் என பல அம்சங்களயும் கலந்து கிராமீய பின்னணியில் படத்தை இயக்கியுள்ளார் சற்குணம் .
இது போன்ற படங்கள் ,குடும்பத்துடன் திரைஅரங்குக்கு படம் பார்க்க வரக்கூடிய ஆடியன்ஸை நிச்சயம் கவரும் .