கதையின் நாயகன் ஆதி சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என்பதற்காக கடன் வாங்கி ஆரம்பித்த தொழிலில் இழப்பு ஏற்பட்டு கடனாளியாகிறார் ,அவரிடம் பணம் கடன் கொடுத்தவரோ குறிப்பிட்ட நாட்களுக்குள் கடன் தொகையை திருப்பி தர வேண்டும். அப்படி தராவிட்டால் உன் தங்கையை திருமணம் செய்துகொண்டுவிடுவேன் என்று சொல்ல ,கடனை அடைத்து தங்கையோட வாழ்க்கையையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வரும் ஆதி, சென்னையில் இருக்கும் நண்பர் யோகி பாபுவுடன் சேர்ந்து திருட்டு தொழிலில் சேர்ந்து அவருடன் பாட்னராகிவிடுகிறார் . அப்போது கிடைத்த ஒரு அசைன்மென்ட்டின்படி விஞ்ஞான ஆரய்ச்சியாளரான பாண்டியராஜனிடமிருந்து முக்கியமாண் ஒன்றை திருடும்போது ஒரு ஊசி யோகிபாபு மேல் செலுத்தப்படுவதால் யோகிபாபு பெண்ணாக மாறுகிறார், அதன் பின் யோகிபாபுவை மீண்டும் ஆணாக மாற்ற, ஆதி செய்தது என்ன? இறுதியில் கடனை அடைக்க அவருக்கு பணம் கிடைத்ததா ? தன் தங்கையின் வாழ்க்கையை காப்பாற்ற அவரால் முடிந்ததா ? என்பதே படத்தின் மீதி கதை.
கதையின் நாயகனாய் ஆதி இந்த படத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக நடித்துள்ளார் ஆதி உடன் காம்போ சேர்ந்துள்ள யோகிபாபுவும் தனது பங்குக்கு குறைவில்லாமல் நடித்துள்ளார். படத்தின் முக்கியமான கவனத்தை ஈர்ப்பவர் ஹன்சிகா, அவரது நடிப்பு ரசிக்கும் படி உள்ளது. மேலும் ஜான் விஜய்,ரோபோ சங்கர், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, ஆர்.பாண்டியராஜன், பல்லக் லல்வானி, ‘மைனா’ நந்தினி, முனிஷ்காந்த், ரவி மரியா என ஏராளமான நடிகர்களின் பட்டாளம் படம் முழுக்க நிரம்பியுள்ளது ,இவர்களில் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்களின் கவனத்தை பெறுகிறார்கள்.
முழு நீள நகைச்சுவை படம் தர விரும்பி இருக்கும் இயக்குநர் மனோஜ் தாமோதரன், முதல் பாதி படத்திலும் இன்னுமும் நகைச்சுவை காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கலாம் .மேலே குறிப்பிட்ட பல நடிகர்களை மேலும் பயன்படுத்தி நகைச்சுவையினை கூட்டியிருக்கலாம். ஷபீர்அகமதின் ஒளிப்பதிவும் ,சந்தோஷ் தயாநிதியின் இசையும்,கதைக்கும் காட்சிகளுக்கும் ஏற்ற வகையில் தங்களது பங்களிப்பை கொடுத்துள்ளன.
பாட்னர் – டைம் பாஸ் காமெடி