தற்கொலை எண்ணத்தில் இருக்கும் நாயகன் ஜீவா (ஜிவி பிரகாஷு),தனது பள்ளிப் பருவத்துக் காதலியை தொலைக்காட்சி பேட்டி ஒன்றின் வாயிலாக மீண்டும் சந்திக்க நேர்கிறது. தன்னைபற்றி அவளுக்கு தெரியாத சூழ் நிலையில் தன் காதலை அவளிடம் சொல்லிவிட நினைத்திருக்கும் வேளையில் விபத்து ஒன்றில் சிக்கி கொள்கிறார், அதன் பின்னர் நடக்கும் சம்பவங்கள் அவரை வேறு உலகத்துக்குள் அனுப்பிவைக்கிறது, அங்கு ஜீவா காதலித்தவரே அவருக்கு மனைவியாக இருக்கிறார். நடப்பவைகளை நினைத்து புரியாமல் இருக்கும், அவர் கடைசியில் மெய்யான உலகத்தில் தன் காதலியுடன் இணைந்தாரா? அதன் பின் என்ன நடந்தது ?என்பதே படத்தின் மீதி கதை.
கதையின் நாயகனாய் ஜி.வி.பிரகாஷ் காதலை சொல்ல முடியாமல் தவிப்பது, குழப்பமான சூழ்நிலையில் மனநிலையைச் வெளிப்படுத்தும் தன்மை என கதாபாத்திரத்துக்குள் ஒன்றி பயணிக்கிறார்,நாயகியாக நடித்துள்ள கௌரி ஜி.கிஷன் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு தன் நடிப்பால் பலம் சேர்த்துள்ளார் மேலும் ஜீவியின் நண்பராக வரும் ஆர் ஜே விஜய் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டுகிறார்,கௌதம் மேனன் ஆக வெங்கட் பிரபு நடித்திருப்பதும் ரசிக்க வைக்கிறது
ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய் மற்றும் இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இருவரும் காட்சிகளுக்கு ஏற்றவண்ணம் தங்களது பணியை செவ்வனே செய்துள்ளார்கள்.
கதையின் மையம் சற்று சிக்கலான முடிச்சுகள் நிறைந்தது, ஆனால் அதை தெளிவான திரைக்கதை காட்சிகளின் வாயிலாக ரசிக்கும் வகையில் ,கவனமாக முடிச்சுகளை அவிழ்த்து படத்தை நன்கு உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.
இளையவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள அடியே எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் .