இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் பரமசிவன் பாத்திமா, விமல் ,சாயாதேவி எம் எஸ் பாஸ்கர் ,இசக்கி கார்வண்ணன், காதல் சுகுமார், வீர சமர் மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசை தீபன் சக்கரவர்த்தி, ஒளிப்பதிவு எம் சுகுமார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் சுப்பிரமணியபுரம் என்ற கிராமத்தில் மூன்று மதத்தினரும் மூன்று பகுதிகளில் மதத்தால் பிரிந்து வாழ்கின்றனர் அங்கு ஆங்கிலேயர்களின் காலத்தில் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டு மதம் மாறியவர்கள் வாழும் பகுதி யாக்கோபுரம் என்றும். இன்னொரு புறம் முஸ்லிம்களாக மாறியவர்கள் சுல்தான்புரம் என்று மாற்றிக் கொள்கின்றனர். இந்த ஊர்களுக்கு இடையே எப்பொழுதும் சண்டை சச்சரவுகளும் மோதல்களும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன ,இந்த காலகட்டத்தில் அந்த ஊரில் நடக்கும் திருமணங்களின் போது புது மாப்பிள்ளைகள் கொலை செய்யப்படுகிறார்கள், இவர்கள் இருவரையும் விமல் மற்றும் சாயாதேவி கொலை செய்கிறார்கள்,இந்த கொலைகளை செய்தது யார் என்னும் விசாரணையை துவக்க இன்ஸ்பெக்டர் அந்த ஊருக்கு வருகிறார், அவரால் அந்த கொலைகளை செய்தது யார் என்று கண்டுபிடிக்க முடிந்ததா ?இந்த கிராமங்களில் மதங்களால் ஏன் பிரிவினை நடந்தது? விமலும் சாயாதேவியும் இந்த கொலைகளை செய்வதற்கான காரணம் என்ன ?என்பதே படத்தின் மீதிக்கதை.

விமலும் சாயா தேவியும் பழி வாங்கும் ஆவிகளாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள் ,மேலும் பாதிரியாராக எம் எஸ் பாஸ்கர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இசக்கி கார்வண்ணன் காதல் சுகுமார் வீர சமர் மனோஜ் குமார் வி ஸ்ரீரஞ்சனி சேஷ்விதா,விமல்ராஜ் போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர் படத்தில் இடம்பெறும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் நடித்திருக்கிறார் .
அழகான மலை கிராமத்தை இயற்கை எழிலுடன் சுகமாரின் கேமரா சிறப்பாக பதிவு செய்திருக்கிறது.இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தியின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன,பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு ஏற்ற , சரியான பின்புலத்தை கொடுக்கும் வகையில் நன்கு அமைக்கப்பட்டுள்ளது.
.கிராமங்களில் நடக்கும் மத மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் ,அப்படியே மதம் மாறிவிட்டாலும் மனதளவில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளாமல் தவிக்கும் சிலரின் மன உணர்வுகள் இவற்றை கிராமிய கதை களத்தில் பொருத்தி அதற்கு இணக்கமான திரைக்கதை காட்சிகளை அமைத்து, படத்தை இயக்கி உள்ளார் இயக்குனர் இசக்கி கார் வண்ணன்.
