Monday, May 25

மெட்ராஸ் மேட்னி’ – திரை விமர்சனம்

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் ,ரோஷினி ஹரிப்பிரியன், ஷெல்லி, விஷ்வா, மதுமிதா, கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருக்கும் படம், மெட்ராஸ் மேட்னி , இந்த படத்திற்கு ஒளிப்பதிவு ஆனந்த் ஜி கே ,இசை கே சி பால சாரங்கன்.
கண்ணன் என்னும் ஆட்டோ ஓட்டுநர் தனது மனைவி கமலம் மகள் தீபிகா ,மகன் தினேஷ் இவர்களுடன் சென்னையில் நடுத்தர குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருகிறார், கண்ணனின் பொருளாதாரத்திற்கு தேவையான வாழ்வாதாரமே அவர் ஆட்டோ ஒட்டி சம்பாதித்து கிடைக்கும் குறைந்த வருமானம்தான் அதை வைத்துக்கொண்டு தன்னுடைய குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கிறார்.மகள் ரோஷினி பெங்களூரில் ஐடி வேலையில் பணிபுரிந்து வருகிறார், பிளஸ் டூ படிக்கும் மகன் உடன் இருக்கிறான் ,தந்தைக்கு மகனுக்கும் இடையிலான இடைவெளி, இன்றைய பல குடும்பங்களில் இருப்பதை பிரதிபலிக்கும் வகையில் இவர்களது உறவு அமைந்துள்ளது, தான் ஆசையுடன் வளர்த்த நாய் மின்சார தாக்குதலால் உயிர்விட்ட கோபத்தில் மின் அலுவலகத்திற்கே, சென்று ,சண்டையிடும் மகனை, தேடி வந்து செல்லும் ,கண்ணன் சந்திக்கும் பிரச்சனைகள் என்று ,நெருக்கடியான சூழ்நிலைகளில் கண்ணனின் வாழ்க்கை பயணம் நகர்கிறது ,,இறுதியில், என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை. எழுத்தாளர் ஜோதி ராமையாவாக வரும் சத்யராஜை வைத்து கண்ணனின் கதை சொல்லப்படுகிறது.

கதையின் நாயகனாக காளி வெங்கட் ,.சிறந்த தந்தையாக பரிமளிக்கும் கதாபாத்திரத்தில் ,தனது மாறுபட்ட பரிமாணத்தில் மிளிரும் நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார், பல நடுத்தர குடும்பத்து தந்தையரின் பிரதி பிம்பமாக விளங்கும் கதாபாத்திரத்தில் அவர்களின் பிரதிநிதியாக இந்த படத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம், காளி வெங்கட்டின் மனைவியாக நடித்திருப்பவர் ஷெல்லி கிஷோர் ,நடுத்தர குடும்பத் தலைவியின் கதாபாத்திரத்தில் ,கணவன், மகள், மகன் என குடும்பத்து உறவினர்களின் உணர்வுகளோடு சிக்கி போராடும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மகளாக நடித்துள்ள ரோஷினியும், மகனாக நடித்துள்ள விஷாலும் ,இன்றைய தலைமுறையினரை அப்படியே படம் பிடித்து காட்டும் வகையில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.மற்றும் கீதா கைலாசம். சுதீப். மதுமிதா. சாம்ஸ் போன்றவர்களும் அவரவர்கள் கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளார்கள் .

நடுத்தர குடும்பத்து வாழ்வியலைப் பிரதிபலிக்கும் கதைக்கு ஏற்ற வகையில் காட்சிகளுக்கு இணக்கமாக ஒளிப்பதிவாளர் ஆனந்த் தன்னுடைய பங்களிப்பை நன்றி கொடுத்துள்ளார். பின்னணி இசையிலும் பாடல்களிலும் பாலசங்கரனின் இசை படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களின் எண்ண உணர்வுகளுக்கு ஏற்ப இழையோடும் வண்ணம் நன்கு அமைக்கப்பட்டுள்ளது .படத்தை எழுதி இயக்கி இருப்பவர் இயக்குனர் கார்த்திகேயன் மணி ,.நடுத்தர குடும்பத் தலைவனின் கனவுகள்,அந்த குடும்பத் தலைவனுக்கும், அவனது வாரிசுகளுக்கும் இடையே உள்ள தலைமுறை இடைவெளி, இவற்றை மையமாக வைத்து நகரும் கதை.,அதற்கு பொருத்தமான திரைக்கதை காட்சிகள், என இன்றைய சமூக வாழ்வியலோடு இணைத்து, படம் பார்ப்பவர்களின் மனங்களை ஏதோ ஒரு வகையில் தொடர்பு படுத்தி ,சிறப்பான படமாக இயக்கியுள்ளார் கார்த்திகேயன் மணி சில படங்களை குடும்பத்துடன் பார்க்கலாம் என்று சொல்வார்கள்,இந்த மெட்ராஸ் மேட்னியை பொறுத்தவரையில் குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று உறுதியாக சொல்லலாம்.

மொத்தத்தில் -,மெட்ராஸ் மேட்னி, மிடில் கிளாஸ் ஃபேமிலி ரியல் ஷோ.

Spread the love