தமிழ் சினிமாவில் படம் எடுக்கும் பாம்பை வைத்து படமெடுத்தவர்கள் பல பேர் ,அந்த வரிசையில் வந்துள்ள மற்றுமொரு படம் இந்த பாம்பாட்டம்
பெரியதொரு சமாஸ்தானத்தையே அரசாண்டு கொண்டுள்ள மல்லிகா ஷெராவத்திடம் ஒரு ஜோசியர் ஒரு பாம்பால் மல்லிகாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று ஆருடம் சொல்ல, அவர் தன் ராஜாங்கத்துக்குட்பட்ட இடங்களில் இருக்கும் அனைத்து பாம்புகளையும் கொன்றுவிட ஆணையிடுகிறார் ஆனால் அதில் தப்பிப் பிழைத்த ராட்சத பாம்பொன்று மல்லிகாவைக் கொல்ல, மேலும் அவரது மகளுக்கும் இதே ஆபத்து உள்ளது என்று ஜோசியர் கூறுகிறார். இதனால் அவர்கள் ஊரை விட்டு வெளியேறுகின்றனர் இதன் பிறகு ராணியின் ஆவி அந்த அரண்மனையில் சுற்றி வருவதாக நம்பப்பட்டது ,உண்மையை அறிய விசாரிக்க வரும் காவல் அதிகாரியாக ஜீவன் அங்கு வருகிறார், அதன் பின்பு அங்கு நடந்தவைகள் என்ன என்பதை சுற்றி நகர்கிறது பாம்பாட்டத்தின் மீதி கதை.
பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் ராணி கதாபாத்திரத்தில் நன்கு நடித்துள்ளார் ஜீவன் தந்தை மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.மேலும் இளவரசியாக வருகிற ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா, சுமன், சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா ஆகியோரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தங்களது நடிப்பை நிறைவாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.
அம்ரிஷின் இசையும் , இனியன் ஜெ.ஹாரிஸின் ஒளிப்பதிவும் கதைக்கும் ,காட்சிகளுக்கும் ஏற்ப பயணிக்கிறது. பாடல்களில் இன்னமும் கவனம் செலுத்தியிருந்தால் அது படத்துக்கும் இன்னமும் வலு சேர்த்து இருக்கும் .வரைகலை காட்சிகளில் பிரமிப்பு இருந்தாலும் நம்பகதன்மை குறைவாகவுள்ளது.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – VC வடிவுடையான் கதையில் இருக்கும் , பிரமாண்டம் திரைக்கதையில் காட்சிகளை அமைப்பதிலும், அதை உருவாக்குவதிலும் இருந்திருந்தால் இன்னமும் படத்துக்கு பலம் சேர்த்து இருக்கும் ..

பாம்பாட்டம் -லாஜிக் இல்லாத மேஜிக் பாம்பு படங்களின் வரிசையில் மற்றுமொரு TIME PASS படம் .
