Wednesday, May 6

பானி பூரி- விமர்சனம்

ஃபுல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள ‘பானி பூரி’ தொடரில் லிங்கா, சாம்பிகா, இளங்கோ குமரவேல், கனிகா, வினோத் சாகர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார் 8 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடரை, தமிழ் ஓடிடியான ஷார்ட்ஃபிலிக்ஸில் ( Shortflix) பார்த்து ரசிக்கலாம்.

பூர்ணிமா என்கிற பூரி (சாம்பிகா) சென்னையில் இருக்கும் ஒரு மென்பொருள் கம்பெனியில் ரோபோட்டிக்ஸ் துறையில் பணிபுரிபவர் பூர்ணிமா (சாம்பிகா) இவரும் கோவையில் இருக்கும் தண்டாயுதபாணியும் (லிங்கா) காதலர்கள். ஒரு சூழ்நிலையில் சாம்பிகா, லிங்காவுடனான காதலை முறித்துக்கொள்ள முடிவு செய்கிறார். .இதை அறியும் சாம்பிகாவின் அப்பா இளங்கோ குமரவேல். குழப்பத்தில் இருக்கும் சாம்பிகாவுக்கு ஒரு யோசனையை சொல்கிறார், அது என்னவென்றால் திருமணத்திற்கு முன்பாக காதலர்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள ஒரே வீட்டில் இருவரும் ஏழு நாட்கள் தங்கிய பின்பு காதல் குறித்து முடிவெடுக்கும் படி கூறுகிறார். அவரது அந்த யோசனைப்படியே இருவரும் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் ஒன்றாக தங்குகிறார்கள்.அவர்கள் ஒன்றாக வாழ்ந்த அந்த 7 நாட்கள் இருவரையும் திருமணத்தில் இணைத்ததா? இல்லையா ? என்பது தான் ‘பானி பூரி’ தொடரின் மீதி கதை.

கதையின் நாயகனாய் லிங்கா இந்த தொடரில் தொடரில் மிக இயல்பாக நடித்து இன்றைய இளைஞர்களை பிரதிபலித்துள்ளார். தொடரின் நாயகியாய் ரோபோக்களை உருவாக்கும் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி சாம்பிகா தான் ஏற்று கொண்ட கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடிப்பை வெளிப்படித்தியுள்ளார்.

சாம்பிகாவின் அப்பாவாக இளங்கோ குமரவேல் நடித்துள்ளார் வாழ்க்கையின் யதார்த்தங்களை புரிந்து கொண்டு நடிக்கும் தந்தையாக நன்கு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், மற்றும் வினோத் சாகர். ஸ்ரீகிருஷ்ண தயாள், கனிகா இவர்கள் அனைவரும் குருவின்றி நிர்வாக தத்தம் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலுவும் படத்தொகுப்பாளர் பி.கே-வும் முறையே கதைக்கேற்ற வகையில்காட்சிகளை பதிவு செய்வதிலும் தொகுப்பதிலும் நமக்கு பணிபுரிந்து இயக்குனருக்கு உறுதுணையாய் நின்றுள்ளார்கள்,  .இசையமைப்பாளர் நவ்னீத் சுந்தரின் பின்னணி இசை தொடரின் கதை மற்றும் காட்சிகளின் நகர்வுக்கு ஏற்ற வகையில் கூடவே தனது பங்களிப்பை வழங்கியுள்ளது .

இன்றைய தலைமுறையினரின் காலகட்டத்துக்குள் ஊடுருவிக்கொன்றிருக்கும் லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறை குறித்த பார்வையை பதிவு செய்வதோடு அதை பொழுதுபோக்கு அம்சங்களோடு உருவாக்கியுள்ளார், இயக்குனர் பாலாஜி வேணுகோபால்..

Spread the love