கேரளாவில், வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட எதுவுமின்றி வாழும் மலைவாழ் பழங்குடியினராகிய நாயாடிகள் (வேட்டைக்காரர்கள் என்று பொருள்படும்) மற்றும் அவர்களின் வரலாறு பற்றிய கதையை திரையில் சொல்லும் படம் ‘நாயாடி’
பல வருடங்களாக துன்பப்பட்டு வரும் நாயாடிகள், கடந்த காலத்தில் மனிதர்கள் மற்றும் விலங்குகளிடமிருந்து தங்களைக் பாதுகாத்துக்கொள்ளும் வண்ணமாக , பில்லி சூனியம் மற்றும் மாந்திரீகங்களை கற்று அதை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதையும், அவர்களின் இக்கால தொடர்பு குறித்தும் இந்த படத்தின் கதை அமைந்துள்ளது.
காட்டுப் பகுதியில்உள்ள பழமையான ஒரு பங்களாவில் உள்ள அமானுஷ்யங்களை ஆராய இளம் யூடியூபர்களான ஆதர்ஷ், காதம்பரி, பே ஃபியன், நிவாஸ், அரவிந்த் சாமி, ஆகியோரின் உதவி நாடப்படுகிறது . அதன்படி அங்கு செல்லும் அவர்கள் , அங்குள்ள அமானுஷ்யங்களின் மூலம் மர்மம் மற்றும் அச்சமும் நிறைந்த அனுபவங்களை சந்திக்க நேரிடுகிறது, அந்த அச்சமூட்டும் அமானுஷ்யங்களின் பின்புலம் என்ன? அந்த காட்டுக்குள் அவர்கள் சந்தித்த சிக்கல்கலிருந்து அவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஆதர்ஷ் மதிகாந்தம் என்பவர் இந்த திரைப்படத்தை தயாரித்து இயக்கியதோடு முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார், தமிழ்நாட்டை சேர்ந்தர் இவர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மெட்ரோ ரயிலில் ஓட்டுநராக பணிபுரிந்தவராம் , நாயாடிகளின் வரலாறு பற்றிய கதையை திரில்லிங் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த பேண்டஸி படமாக எடுத்துள்ள இயக்குனர் கிளைமாக்ஸ் காட்சியில் எதிர்பாராத திருப்பம் ஒன்றை நன்கு அமைத்துள்ளார். அரிய மக்களின் பின்புலத்தை கொண்ட கதையினை உருவாக்கிருப்பது பாராட்டக்கூடியது .மற்றும் காதம்பரி, பே ஃபியன், நிவாஸ், அரவிந்த் சாமி, ரவிச்சந்திரன் கீதாலஷ்மி என படத்தில் நடித்த அனைவரும் தங்களுக்கேற்ற கதாபாத்திரங்களை ஏற்று நன்கு நடிதுள்ளார்கள்.
இந்த படத்தில் கதைக்கேற்ற காட்சிகளை நன்கு பதிவு செய்வதில் ஒளிப்பதிவாளர்இ மோசஸ் டேனியல் வெற்றி பெற்றுள்ளார், இசையமைப்பாளர் அருண், படத்தொகுப்பாளர் சி.எம்.இளங்கோவன் மற்றும் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ள புரூஸ் லீ ராஜேசும் படத்திற்கு தேவையான தங்களது பங்களிப்பை ஓரளவுக்கு கொடுத்துள்ளார்கள்.
பின்தங்கிய மலைவாழ் மக்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் கதையை உருவாக்கி, அதை மக்களிடம் படம் வாயிலாக கொண்டு சென்றதுக்காகவும், புதியவர்களின் முதல் முயற்ச்சிக்காகவும் படக்குழுவினரை வாழ்த்தி பாராட்டலாம் .
