Tuesday, June 23

’நிர்வாகம் பொறுப்பல்ல’- திரைப்பட விமர்சனம்

மக்கள் ஏமாறத்துக்கு ரெடியா இருக்கும்பொழுது நாம் ஏமாத்தறதுல தப்பே கிடையாது என்னும் தற்கால கொள்கையில் பிடிப்பு கொண்ட நாயகனான எஸ்.கார்த்தீஸ்வரன் தனது ஐவர் குழு மூலம் பல பேரை ஏமாற்றி பல கோடிகளை பொருளீட்டுகின்றான் ,அவனது , குழுவில் ஆதவன்,லிவிங்ஸ்டன்,, இமான்அண்ணாச்சி ப்ளாக் பாண்டி மிருதுளா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் ஆகியோர் உள்ளார்கள். இந்த நாயகனை கையும் களவுமாக பிடிக்கும் காவல் அதிகாரியாக ஸ்ரீநிதி உள்ளார் , இறுதியில் என்ன நடந்தது? கார்த்தீஸ்வரன் காவல்துறையிடம் சிக்கினாரா ? இல்லையா ?அவர் இப்படி பல மோசடிகள் செய்வதற்கு என்ன காரணம் ?இது போன்ற பல வினாக்களுக்கான விடைகளை தருகிறது நிர்வாகம் பொறுப்பல்ல படத்தின் மீதி கதை .

பல விதங்களில் மோசடிகள் செய்து மக்களிடம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் கதாபாத்திரத்தில் சில கெட்டப்புகளில் தோன்றி தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றதொரு நடிப்பை நல்ல முறையில் வழங்கி இருக்கிறார் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஸ்ரீநிதி தன்னுடைய மிடுக்கான நடிப்பினால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார். லிவிங்ஸ்டனின் அனுபவ நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது. ஒளிப்பதிவாளர் என் எஸ் ராஜேஷ் பட தொகுப்பாளர் சஜினும் கட்டும் இயக்குனரின் எண்ணத்திற்கு ஏற்ற வகையில் கதையோட்டத்துடன் பயணிக்கத் தக்க வகையில் காட்சிகளை பதிவு செய்வதாகட்டும் ,தொகுப்பாகட்டும் தங்களது பணிகளில் நிறைவான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் அவருக்கே உரித்தான பாணியில் இடம் பெற்றுள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் ரசிக்கும் படி உள்ளது.

இன்றைய நவீன காலத்தில் பல தொழில்நுட்பங்கள் மூலமும் எளிய மக்களுக்கு ஆசைகளை தூண்டுவதன் மூலமும் சமூகத்தில் நடைபெறும் பல்வேறு மோசடிகளை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகளை அமைத்து, இதன் மூலம் இது போன்ற சிக்கல்களில் சிக்கித் தவிக்காத பிற மக்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியும் கொடுக்கும் வகையில் இந்த படத்தை இயக்கியுள்ளார் எஸ் கார்த்தீஸ்வரன்

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் திருந்தே தீருவார்கள் என்னும் எச்சரிக்கை செய்தியை மக்களுக்கு இந்த படம் பொறுப்போடு பதிவு செய்கிறது.

Spread the love