Sunday, February 16

“படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரை ரசிகர்களைக் கட்டிப்போடும் படமாக ‘நேசிப்பாயா’ இருக்கும்” – நடிகை அதிதி ஷங்கர்!

குறுகிய காலத்திலேயே தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை அதிதி ஷங்கர். இப்போது இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக இவர் நடித்திருக்கும் ’நேசிப்பாயா’ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.படம் பற்றி நடிகை அதிதி ஷங்கர் கூறும்போது, “ஸ்டைலிஷான இயக்குநர் விஷ்ணு வர்தனுடன் பணிபுரிய வேண்டும் என்பது மற்ற நடிகர்களைப் போல எனக்கும் கனவாக இருந்தது. கதாநாயகிகளை தன்னுடைய படத்தில் எப்போதும் அவர் அழகாக காட்டுவதோடு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரத்திலும் நடிக்க வைப்பார். முழு படப்பிடிப்பு அனுபவமும் சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. ஆகாஷ் முரளியுடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம்.  யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ரசிகர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். ஒளிப்பதிவாளர் கேமரூனும் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘நேசிப்பாயா’ திரைப்படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரை ரசிகர்களைக் கட்டிப்போடும் படமாக இருக்கும்” என்றார்.இந்தப் படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்க சினேகா பிரிட்டோ இணைந்து தயாரித்துள்ளார்.தொழில்நுட்ப குழு:

இசை: யுவன் ஷங்கர் ராஜா,
ஒளிப்பதிவு: கேமரூன் எரிக் பிரிசன்,
படத்தொகுப்பு: அ.ஸ்ரீகர் பிரசாத்,
தயாரிப்பு வடிவமைப்பு : சரவணன் வசந்த்,
பாடலாசிரியர்கள் : பா.விஜய், விக்னேஷ் சிவன், ஆதேஷ் கிருஷ்ணா,
நடனம் : தினேஷ்,
சவுண்ட் டிசைன் & மிக்ஸ் : தபஸ் நாயக்,
ஆடை வடிவமைப்பாளர் : அனு வர்தன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்

Spread the love