Friday, April 17

நீளிரா-திரை விமர்சனம்

ஈழம் சார்ந்த கதைகள் தமிழ் சினிமாவில் பல நேரங்களில் பலவிதமான கோணங்களில் பல படங்களாக வந்திருக்கின்றன ,அதில் சொல்லப்படாத ஒரு புது விஷயத்தை மையப்படுத்தி ,போர்க்கால சூழலுக்குள் நடக்கும் சம்பவத்தை  வைத்து வெளி வந்திருக்கின்ற படம் நிளீரா.

1988 -ல் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடக்கும் போர் களத்தில், அங்கு  வசிக்கின்ற கபிலா வேணு, தன்னுடைய மகள் ரூபா கொடுவாயூருக்கு கல்யாணம் செய்து வைத்து, அவங்க விருப்பப்படி பிரான்ஸுக்கு அனுப்பணும்னு முடிவு பண்றாங்க., இதுக்காக பல இடங்களில் ஒப்புதலும் வாங்குறாங்க, விடிந்தால் கல்யாணம் என்ற சூழ்நிலை இருக்க, அந்த இரவு நேரத்துல போராளிகளை மறைமுகமாக தாக்க இந்திய ராணுவம் திட்டம் தீட்டுகிறது ,நவீன் சந்திராவும் அவருடைய டீமும் இந்த திருமண வீட்டுக்கு வராங்க., எப்படியாவது போராளிகள் கிட்ட சிக்காம இந்த ஒரு இரவு மட்டும் கடந்துவிட்டால் அடுத்த நாள் தங்களது டீம் வந்து பாதுகாப்பாக தங்களை கூட்டிட்டு போயிடுவாங்கன்னு நினைக்கிறாங்க ,அவர்கள் அந்த வீட்டில் பதுங்கி இருப்பதை அறிந்து கொண்ட போராளிகள் அவர்களை தாக்க திட்டமிடுகிறார்கள். இப்படியாக கடந்து செல்லும் அந்த ‘நீள் இரவு’ சந்தித்த சம்பவங்கள் என்ன ? இந்திய அமைதிப்படையினர் மற்றும் போராளி குழுக்கள் என இரு குழுவினருடன் சிக்கி கொள்ளும் அந்த ஈழத் தமிழர் குடும்பத்தின் திருமண வீட்டில் அதன் பின் நடந்தது என்ன? என்பதை போர் சூழலின் போது ஒரு எளிய குடும்பத்தில் நடந்த சம்பவங்களின் பார்வையில்  இந்த படத்தின் மீதிக்கதை செல்லுகிறது.

இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்களை பொறுத்த மட்டில், இந்திய அமைதிப்படையின் கேப்டனாக நடித்திருக்கும் நவீன் சந்திராவும் மற்றும் போராளிப் படையின் கேப்டனாக நடித்திருக்கும் சனத்தும் தாங்கள் ஏற்றுள்ள கதாபாத்திரங்களின் ன் தன்மைக்கு ஏற்ப நிறைவாக தங்கள் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள் ,போர் எளிய குடும்ப ங்களின் நிகழ்வுகளில் ஏற்படுத்தும் பாதிப்புகளில் சிக்கும் குடும்பங்களின் உணர்வுகளை சொல்லும் கதாபாத்திரங்களில் கபிலா வேணு,. ரூபா கொடுவாயூர் போன்ற்வர்கள் நேர்த்தியான நடிப்பை நன்கு கொடுத்துள்ளார்கள் .மற்றும் விது, சித்து குமரேசன், நவயுகா, சுவாதி கிருஷ்ணன், நமசிவாயம் தம்பிப்பிள்ளை, கயல் வின்சென்ட் ,ரோகித் கோகடே போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளார்கள் .
ஒரு வீட்டுக்குள், இரவில் நடக்கும் கதையை அதற்கேற்ற ஒளி அமைப்புகளுடன் நேர்த்தியான கோணங்களுடன் ,கதைக்கு தேவையான பின்புலத்தை தரும் வகையில், ஒளிப்பதிவாளர் செல்வரத்தினம் பிரதீபனின் பணி சிறப்பாக செல்லுகிறது ,.படத்திற்கு தேவையான வேகத்தினையும், விறுவிறுப்பனையும் ராதா ஸ்ரீதரின் படத்தொகுப்பு நன்கு கொடுத்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு ஈழத்து இல்லத்தை தத்துரூபமாக, நாம் கால வெள்ளத்தில் பின்னோக்கி பயணித்து பார்க்கும் வகையில் சிறப்பாக வடிவமைத்து இருக்கும் கலை இயக்குனர் மார்ட்டீனின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. .காட்சிகளுக்கு தேவையான சிறப்பான பின்னணிஇசையினை இசையமைப்பாளர் கே வழங்கி கதை நிகழும் சூழலுக்கு ரசிகர்களை பயணிக்க வைத்துள்ளார்.

போர்க்கால சூழலின் போது எளிய சாதாரண குடும்பத்தினர் சந்தித்த வலிகளை, துயரங்களை உணர்வுபூர்வமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர் சோமிதரன். அந்த சூழலை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களுக்கு இணைக்கமான நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளது இயக்குனரின் சிறப்பான பணி என்று சொல்லலாம்.

மொத்தத்தில் இந்த நீளிரா திரைப்படம், ஈழ மண்ணில் நடந்த போர்க்காலச் சூழலை இன்றைய சமூகத்தினரும் அறிந்து,தெரிந்து கொள்ளும் வகையில் செய்யப்பட்டுள்ள நிறைவான பதிவு.

Spread the love