Friday, April 17

லீடர்-திரை விமர்சனம்

நாயகன் ஒரு சாதாரண மெக்கானிக் என்றாலும் அவன் வாழ்க்கையில் நடக்கிற ஒவ்வொரு விஷயமும்… சாதாரணமல்ல என்பதை திரைமொழியில் சொல்லுகிறது லீடர்.

தூத்துக்குடியில் ஒரு சாதாரண கார் மெக்கானிக்காக வாழ்பவர் லெஜென் சரவணன் தாய் இல்லாத தன் மகள் மீது அளவற்ற பாசம் கொண்ட அவர் மகளை உலகம் என வாழ்ந்து வருகிறார் அதே ஊரில் துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடும் பாகுபலி பிரபாகரனின் நடவடிக்கைகளை தடுக்க முயற்சிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா சரவணன் மகளை வைத்து திட்டம் திட்டுகிறார்,வேலையின் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு சரவணன் அடிக்கடி சென்று வருவதால் அவரது உதவியினை ஆண்ட்ரியா கேட்கிறார் ஆனால் அதற்கு சரவணன் முதலில் மறுப்பு தெரிவிக்கிறார் பிறகு ஆண்ட்ரியா சரவணன் மகளை வைத்து ஒரு திட்டம் திட்டுகிறார் அதன்படி பிரபாகரனின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் சரவணன் ஈடுபடுகிறார். ஒரு மெக்கானிக்கின் இந்த அதிரடி நடவடிக்கைகளை பார்த்து காவல் அதிகாரியான ஷாம் லெஜெண்ட் சரவணன் பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறார் அப்பொழுதுதான் லெஜெண்ட் சரவணன் பற்றிய பல விஷயங்கள் தெரிய வருகிறது உண்மையில் அவர் யார் ? அவரது பின்னணி என்ன ?இதைப் பற்றி விறுவிறுப்பான திரைக்கதை காட்சியின் வழியே பயணிக்கிறது லீடர் படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனாக ஒரு பக்கா மாஸ் ஹீரோவாக சக்திவேல் என்னும் கதாபாத்திரத்தில் லெஜெண்ட் சரவணன் நடித்துள்ளார். அன்பு மகள் மீது நிறைந்த பாசம் கொண்ட தந்தையாகவும் ,எதிரிகளோடு மோதும் பொழுது அதிரடி ஆக்சன் நாயகனாகவும் பல பரிமாணங்களில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் . போலீஸ் இன்ஸ்பெக்டராக ஆன்ட்ரியாவும், போலீஸ் உயரதிகாரியாக ஷாமும் தாங்கள் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பை நிறைவாக கொடுத்துள்ளார்கள். பாயல் ராஜ் புத் நாயகியாக நடித்துள்ளார் அவர் தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளை நான்கு பயன்படுத்திக் கொண்டு குறைவில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார். மேலும் பாகுபலி பிரபாகரன், டிடிவி கணேஷ், சந்தோஷ் பிரதாப் ,இயல் ,லால் , ஆதித்யா கதிர் போன்ற ஏனைய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கக்கூடிய நடிகர்களும், கதைக்கும் காட்சிகளுக்கும் தக்க படி நன்றாகவே நடித்துள்ளார்கள் என்று சொல்லலாம் .

காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் தெரியும் வண்ணம் நேர்த்தியான படப்பதிவினையும்,. மேலும் அதிரடி ஆக்சன் காட்சிகளை சிறப்பாக படமாக்கிய தன்மைக்கும் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் எஸ் பாராட்டினை பெறுகிறார் . இசையமைப்பாளர் ஜிப்ரனின் இசையில் பாடல்கள் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் ரசிக்கும்படி இனிமையாக உள்ளது.பின்னணி இசையை பொருத்தமட்டில் அதிரடி ஆக்சன் காட்சிகளுக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் நன்கு அமைக்கப்பட்டுள்ளது. படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவனின் பங்களிப்பு படத்தின் வேகத்தினையும் , விறுவிறுப்பனையும் கூட்டி உள்ளது.ஆக்ஷன் இயக்குநர் மகேஷ் மேத்யூவின் பணி அதிரடி சண்டைக் காட்சிகளை அமைத்த விதத்தில் ரசிக்கும்படி உள்ளது.

எடுத்துக்கொண்ட கதைக்கு விறுவிறுப்பான திரைக்கதை காட்சிகளை நயம்பட அமைத்து சென்டிமென்ட் ஆக்‌ஷன், ட்விஸ்ட் எல்லாமும் சேர்ந்த ஒரு முழுமையான கமெர்ஷியல் பேக்கேஜ் படத்தினை பக்காவான ஒரு மாஸ் ஹீரோவுக்கு ஏற்றபடி இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில் ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார்

மொத்தத்தில் ‘லீடர்’ அனைத்து ரசிகர்களையும் கவரும் ஒரு முழுமையான பொழுது போக்கு படம்

Spread the love